அரசியல் செய்தி

தமிழ்நாடு

மண் கடத்துவோர் மீது நடவடிக்கை இல்லை: அதிகாரிகள் மீது பா.ஜ., புகார்

Updated : ஆக 09, 2021 | Added : ஆக 09, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
அன்னுார்:'அன்னுார் தாலுகாவில், மண் கடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை' என, பா.ஜ., புகார் தெரிவித்துள்ளது.அன்னுார் அருகே அல்லப்பாளையம் ஊராட்சியில், கொசவன் பாறை குட்டை என்னுமிடத்தில், 400 அடி நீளம், 100 அடி அகலம், 30 அடி ஆழத்திற்கு தோண்டப்பட்டு நூற்றுக்கணக்கான லோடு மண் கடத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து கடந்த 25ம் தேதி, 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
 மண் கடத்துவோர் மீது நடவடிக்கை இல்லை: அதிகாரிகள் மீது பா.ஜ., புகார்

அன்னுார்:'அன்னுார் தாலுகாவில், மண் கடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை' என, பா.ஜ., புகார் தெரிவித்துள்ளது

.அன்னுார் அருகே அல்லப்பாளையம் ஊராட்சியில், கொசவன் பாறை குட்டை என்னுமிடத்தில், 400 அடி நீளம், 100 அடி அகலம், 30 அடி ஆழத்திற்கு தோண்டப்பட்டு நூற்றுக்கணக்கான லோடு மண் கடத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து கடந்த 25ம் தேதி, 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து சம்பவ இடத்தில் அன்னுார் தாசில்தார் ரத்தினம் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கனிம வளத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

அங்கு எடுக்கப்பட்ட மண் அளவு குறித்தும் தகவல் தெரிவித்தனர். ஆய்வு முடிந்து அறிக்கை அளித்து 13 நாட்கள் ஆகிவிட்டது. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.கண்டுகொள்ளாத துறைகள்மண் எடுத்தோர், உதவியோர் மீது வருவாய் துறை, கனிமவளத் துறை, காவல் துறை என, எந்தத் துறையும் நடவடிக்கை எடுக்கவில்லை.இதுகுறித்து எஸ்.எஸ்.குளம் ஒன்றிய பா.ஜ., தலைவர் கோபால் கூறுகையில், "அன்னுார் தாலுகாவில், அல்லப்பாளையம் மற்றும் கொண்டையம்பாளையம் ஊராட்சியில் காளிங்கராயன் குலம் என பல குளங்களில், பல லட்ச ரூபாய் மதிப்பில், நூற்றுக்கணக்கான லோடு மண் எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மண் எடுத்த லாரியின் எண் உள்பட அனைத்து தகவல்களையும் தெரிவித்தும் வருவாய்த்துறை அதிகாரிகளும், போலீசாரும், கனிம வளத் துறையினரும் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கின்றனர்.மண் கடத்தலுக்கும், விற்பனைக்கும் துணை போகின்றனர். மண் கடத்துவோர் மற்றும் அவர்களுக்குத் துணைபோகும், வருவாய்த்துறை, காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இதுகுறித்து தாசில்தார் ரத்தினத்திடம் கேட்டபோது, "அல்லப்பாளையத்தில் மண் எடுத்தது குறித்து கனிம வளத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டது. அபராதம் குறித்து அவர்கள் பரிந்துரை செய்வதற்கான பணிகள் நடந்து வருகிறது" என்றார்.கொண்டையம்பாளையம் ஊராட்சியில் 200 லோடு மண் கடத்தியவர்கள் மீது 45 நாட்கள் ஆகியும் நடவடிக்கை இல்லை.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
09-ஆக-202117:07:07 IST Report Abuse
r.sundaram யார் மண் எடுத்தார்கள், குற்ற வாலி யார் என்று தெரியும் முன்னேயே அபராதத்தை பற்றி பரிசீலிக்கிறார்களாக்கும்..
Rate this:
Cancel
Gandhi - Chennai,இந்தியா
09-ஆக-202116:19:57 IST Report Abuse
Gandhi கனிம வளத்தை கொள்ளையடிக்க தான் திராவிட கட்சிகள் தேர்தலில் முதலீடு செய்து ஆட்சிக்கு வருகிறார்கள். மணல் , கல்குவாரி, ரோடு, டாஸ்மாக் வருமானம் அவர்களின் பிறப்புரிமை.
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
09-ஆக-202114:57:17 IST Report Abuse
Dhurvesh இது நாள் வரை மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்காக பா ஜ க குரல் குடுததும் இல்லை போராடியதும் இல்லை...அவர்கள் செய்தது செய்வது எல்லாம் மக்களை இன மத சாதி ரீதியாக பிரிக்கும் சூழ்ச்சி மட்டும் தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X