பொது செய்தி

இந்தியா

பசுஞ்சாண தயாரிப்பு பொருள்:'ஆன்லைனில்'விற்கும் காங்., அரசு

Updated : ஆக 09, 2021 | Added : ஆக 09, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
ராய்ப்பூர்-விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் வகையில், பசு மாடு சாணத்தில் தயாரிக்கப்பட்ட பொருட்களை 'ஆன்லைன்' வர்த்தக நிறுவனங்கள் வாயிலாக சத்தீஸ்கர் காங்கிரஸ் அரசு விற்கிறது.சத்தீஸ்கரில் முதல்வர் புபேஷ் பாகேல் தலைமையிலான காங்., அரசு அமைந்துள்ளது. விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் வகையில் பசுஞ் சாணத்தை அவர்களிடம் இருந்து மாநில அரசு

ராய்ப்பூர்-விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் வகையில், பசு மாடு சாணத்தில் தயாரிக்கப்பட்ட பொருட்களை 'ஆன்லைன்' வர்த்தக நிறுவனங்கள் வாயிலாக சத்தீஸ்கர் காங்கிரஸ் அரசு விற்கிறது.



latest tamil news



சத்தீஸ்கரில் முதல்வர் புபேஷ் பாகேல் தலைமையிலான காங்., அரசு அமைந்துள்ளது. விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் வகையில் பசுஞ் சாணத்தை அவர்களிடம் இருந்து மாநில அரசு வாங்குகிறது. 1 கிலோ பசுஞ் சாணம் 2 ரூபாய்க்கு வாங்கப்படுகிறது. இந்நிலையில் ராஜ்நந்த்காவ்ன் மாவட்டத்தில் பசுஞ்சாணம் வாயிலாக பல்வேறு பொருட்கள் தயாரிப்பது அதிகரித்துள்ளது.

இந்த மாவட்டத்தைச் சேர்ந்த 354 சுய உதவிக் குழுவைச் சேர்ந்த 4,000 பெண்கள் இதில் ஈடுபட்டு உள்ளனர். பசுஞ்சாணத்தில் இருந்து உரம், வரட்டி, விளக்கு, பூந்தொட்டி போன்றவை தயாரிக்கப்படுகின்றன.இவ்வாறு தயாரிக்கப்பட்டுள்ள 5 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் இதுவரை விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் மஹாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் என பல மாநிலங்களில் இந்தப் பொருட்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.


latest tamil news



இதையடுத்து ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் வாயிலாக பசுஞ் சாணப் பொருட்களை விற்பதற்கு, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. விற்பனை துவங்கிய சில நாட்களிலேயே ஒரு லட்சம் ரூபாய்க்கு பொருட்கள் விற்கப்பட்டு உள்ளன. இதனால் விவசாயிகளுக்கும் அதிக வருவாய் கிடைத்து வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
09-ஆக-202114:46:42 IST Report Abuse
pradeesh parthasarathy பசுவின் பெயரிலும் பசுஞ்சாணத்தின் பெயரிலும் பத்து பேருக்கு வாழ்க்கையை உருவாக்கி கொடுப்பது காங்கிரஸ், பசுவின் பெயரிலும் பசுஞ்சாணத்தின் பெயரிலும் நாட்டில் மத மோதலை உருவாக்குவது பிஜேபி ....
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
09-ஆக-202107:08:56 IST Report Abuse
 N.Purushothaman பசுஞ்சாணத்திலான வண்ண பூச்சு மத்திய அரசு அறிமுகப்படுத்தி அதற்க்கு பெரும் வரவேற்பும் கிடைத்துள்ளது .....
Rate this:
Cancel
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
09-ஆக-202106:57:38 IST Report Abuse
தமிழ்ச்செல்வன் இதையே பிஜேபி ஆளும் மாநில அரசு செஞ்சிருந்தா ?
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
09-ஆக-202113:10:37 IST Report Abuse
தமிழவேல் தங்கம் கிடைச்சி இருக்கும்... (மெடலை சொன்னேன்)...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X