சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : ஆக 09, 2021
Share
Advertisement
'இப்படி முன்கூட்டியே பேசி வைத்தால் தான், உள்ளாட்சி தேர்தலில் உங்களுக்கு விருப்பமானவர்களை களம் இறக்கி விட முடியும் என தெரிந்து, பேசி வைக்கிறீர்களோ என்ற சந்தேகம், கட்சியினருக்கு வந்து உள்ளது...' என, கூறத் தோன்றும் வகையில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீரமணி பேச்சு: வரும் உள்ளாட்சி தேர்தலில், அனைவரும் ஒற்றுமையுடன், யார் வெற்றி பெற வாய்ப்புள்ளதோ அவர்களை ஒரு மனதாக தேர்வு
 பேச்சு, பேட்டி, அறிக்கை

'இப்படி முன்கூட்டியே பேசி வைத்தால் தான், உள்ளாட்சி தேர்தலில் உங்களுக்கு விருப்பமானவர்களை களம் இறக்கி விட முடியும் என தெரிந்து, பேசி வைக்கிறீர்களோ என்ற சந்தேகம், கட்சியினருக்கு வந்து உள்ளது...' என, கூறத் தோன்றும் வகையில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீரமணி பேச்சு: வரும் உள்ளாட்சி தேர்தலில், அனைவரும் ஒற்றுமையுடன், யார் வெற்றி பெற வாய்ப்புள்ளதோ அவர்களை ஒரு மனதாக தேர்வு செய்து, அவரது வெற்றிக்கு பாடுபட வேண்டும்.
'இவர்கள் நேரத்திற்கு நேரம் மாற்றிப் பேசுபவர்கள். இக்கட்சியின் பெரும்பாலான தலைவர்கள், இன்னமும் ஜாதிப் பெயர்களுடன் தான் அழைக்கப்படுகின்றனர் என்பதை பக்குவமாக மறைத்துக் கொள்வர்...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை: நம்பூதிரிபாட், புத்ததேவ் பட்டாச்சார்யா, மாணிக் சர்க்கார், வாசுதேவன் நாயர், அச்சுதமேனன் ஆகியோரை தலைவராக கொண்ட கம்யூனிஸ்ட்டுகளுக்கு, ஜாதி அறிவியலுக்கு புறம்பானது என தெரியாமல் போனது எப்படி?
'சில காலத்திற்கு முன் வரை, அனைவரும் தங்கள் பெயரின் பின், ஜாதியை போட்டுக் கொண்டனர்; இப்போது, அப்படியில்லை. எனவே, தலைவர்களின் பெயர்களில் உள்ள ஜாதியை இப்போது அகற்றுவது, மீண்டும் அதை நினைவுபடுத்தும் வகையில் தான் இருக்கும்...' என, கூறத் துாண்டும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி., ரவிகுமார் அறிக்கை: சாதனையாளர்களுக்கு அவர்களின் ஜாதி அடையாளம் கிடையாது; அவர்கள் செய்த சாதனை தான் அடையாளம். எனவே, பெயர்களில் ஜாதி ஒழிப்பு சாதாரணமானவர்களுக்கு மட்டுமின்றி சாதனையாளர்களுக்கும் அவசியம். தமிழக அரசின் முயற்சிக்கு பாராட்டுகள்.
'தடுப்பூசியை வைத்து மிகப் பெரிய அரசியலை, தமிழக அரசு செய்து விடும் என பயந்தே, கூடுதல், 'டோஸ்'களை மத்திய அரசு வழங்கி வருகிறதோ என எண்ணத் தோன்றுகிறது...' என, சொல்லத் துாண்டும் வகையில், தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டி: தமிழகத்தின் தடுப்பூசி தேவை, 12 கோடி. இதுவரை, 2 கோடி வந்துள்ளது. இன்னும், 10 கோடி வர வேண்டியுள்ளது. கடந்த மாதம் வழங்கியது போல இந்த மாதமும் கூடுதலாக தந்தால் நன்றாக இருக்கும்.
'நாடு முழுவதும், 5,000த்திற்கும் மேற்பட்ட அமைப்புகள், இடங்கள், விருதுகளுக்கு நேரு, இந்திரா, ராஜிவ் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன என்ற தகவல் வெளியாகி, 'அடேங்கப்பா...' என்ற அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது...' என, கூறத் தோன்றும் வகையில், பா.ஜ., தேசிய செயலர் ரவி அறிக்கை: கர்நாடகாவில் செயல்படும், 'இந்திரா கேன்டீன்'களின் பெயர்களை, 'அன்னபூர்ணேஸ்வரி கேன்டீன்' என, அந்த மாநில புதிய முதல்வர் பொம்மை மாற்ற வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X