புதுடில்லி: மத்திய ராணுவத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர். கட்சியில் சீனியர். ஆனால் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்பதால் அவர் வருத்தமாக இருக்கிறார். இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

இந்நிலையில், ராஜ்நாத் சிங்கிற்கு சில முக்கிய வேலைகளை வழங்கி அவரை குஷிப்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பார்லிமென்டை முடக்கி வருகின்றன. அவர்களுடன் பேசி தீர்வு காண ராஜ்நாத் சிங்கிற்கு உத்தரவிட்டுள்ளார் பிரதமர். மம்தா உள்ளிட்ட பல எதிர்க்கட்சித் தலைவர்கள் ராஜ்நாத் சிங் மீது மரியாதை வைத்துள்ளனர். அவரிடம் தொடர்பில் இருக்கின்றனர். எனவே, தான் இந்த பொறுப்பை ராஜ்நாத் சிங்கிடம் ஒப்படைத்துள்ளார் மோடி என்கின்றனர்.

இதற்கு வேறொரு முக்கிய காரணமும் சொல்லப்படுகிறது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் உ.பி.,யில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. ராஜ்நாத் சிங் இந்த மாநிலத்தின் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தாகூர் வகுப்பைச் சார்ந்தவர். தேர்தலில் வெற்றி பெற ராஜ்நாத் சிங்கின் உழைப்பு தேவை. இதனால் தான் ராஜ்நாத் சிங் மீது திடீர் கரிசனம் என்றும் பேசப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE