போலி கால்நடை டாக்டர்கள்: கலெக்டர் விடுத்தார் எச்சரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

போலி கால்நடை டாக்டர்கள்: கலெக்டர் விடுத்தார் எச்சரிக்கை

Added : ஆக 09, 2021
Share
கோவை:'போலி கால்நடை மருத்துவர்களுக்கு, 1,000 ரூபாய் அபராதம் மற்றும் ஆறு மாத சிறை தண்டனை வழங்கப்படும்' என, கலெக்டர் சமீரன் எச்சரித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:கால்நடைகளுக்கு, 'கால்நடை மருத்துவ பேரவை' எனப்படும் 'வெட்னரி கவுன்சிலில்' பதிவு பெற்ற மருத்துவர்கள் மட்டுமே, சிகிச்சை அளிக்க அங்கீகாரம் உண்டு.மீறி, போலி மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதும், அவர்களிடம்

கோவை:'போலி கால்நடை மருத்துவர்களுக்கு, 1,000 ரூபாய் அபராதம் மற்றும் ஆறு மாத சிறை தண்டனை வழங்கப்படும்' என, கலெக்டர் சமீரன் எச்சரித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:கால்நடைகளுக்கு, 'கால்நடை மருத்துவ பேரவை' எனப்படும் 'வெட்னரி கவுன்சிலில்' பதிவு பெற்ற மருத்துவர்கள் மட்டுமே, சிகிச்சை அளிக்க அங்கீகாரம் உண்டு.மீறி, போலி மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதும், அவர்களிடம் சிகிச்சை பெறுவதும் தவறு. போலியானவர்களிடம் சிகிச்சை பெறுவதால் ஏற்படும் குறைபாடுகளுக்கு, 'இன்சூரன்ஸ்' நிறுவனம் இழப்பீடு வழங்காது.சினை ஊசி போடுவதற்கு பயிற்சி பெற்ற, செயற்கை முறை கருவூட்டல் பணியாளர்கள் உள்ளனர். அவர்களில் சிலர், போலியாக கால்நடை மருத்துவர் என கூறி, மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். இது, முற்றிலும் தவறு.செயற்கை முறை கருவூட்டல் பணியாளர்கள், மாடுகளுக்கு சினை ஊசி போடுவதற்கு மட்டும் மூன்று மாத பயிற்சி பெறுகின்றனர். அவர்களுக்கு கால்நடைகளுக்கு வரும் நோய்கள், சிகிச்சை முறை மற்றும் வழங்க வேண்டிய மருந்து குறித்து எதுவும் தெரியாது.எனவே, கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்களை மட்டுமே அணுக வேண்டும். போலி மருத்துவர்கள் குறித்த தகவலை, மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் அல்லது போலீஸ் ஸ்டேஷனில் தெரிவிக்கலாம்.முதல்முறை, 1,000 ரூபாய் அபராதம், இரண்டாவது முறை, 1,000 ரூபாய் அபராதம் அல்லது ஆறு மாத சிறை அல்லது இரண்டும் சேர்த்து, தண்டனை வழங்கப்படும்.இவ்வாறு, கலெக்டர் கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X