பொது செய்தி

தமிழ்நாடு

உலக கோப்பை மினி கால்பந்து போட்டி: தமிழகத்தை சேர்ந்த 6 பேர் தேர்வு

Added : ஆக 09, 2021
Share
Advertisement
கோவை:உக்ரைன் நாட்டில், 23 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான மினி கால்பந்து உலக கோப்பை போட்டியும், பெண்களுக்கான மினி கால்பந்து உலக போட்டியும் வரும், 11ம் தேதி நடக்கவுள்ளது. பல்வேறு நாடுகளிலிருந்து, 30க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்க உள்ளன. இப்போட்டிக்கான இந்திய அணி தேர்வு, 'மினி கால்பந்து இந்திய சங்கம்' சார்பில், கடந்த மாதம் நடந்தது. சிறந்த 15 வீரர்கள் தேர்வு
 உலக கோப்பை மினி கால்பந்து போட்டி: தமிழகத்தை சேர்ந்த 6 பேர் தேர்வு

கோவை:உக்ரைன் நாட்டில், 23 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான மினி கால்பந்து உலக கோப்பை போட்டியும், பெண்களுக்கான மினி கால்பந்து உலக போட்டியும் வரும், 11ம் தேதி நடக்கவுள்ளது. பல்வேறு நாடுகளிலிருந்து, 30க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்க உள்ளன. இப்போட்டிக்கான இந்திய அணி தேர்வு, 'மினி கால்பந்து இந்திய சங்கம்' சார்பில், கடந்த மாதம் நடந்தது. சிறந்த 15 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.பெண்கள் பிரிவில், நீலகிரி மாவட்டம் தனியார் பள்ளியில் படிக்கும் சவுமியா, ஜெயஸ்ரீ, ஹப்சிபா கிரேஸ், சஞ்ஜனா, தக் ஷினி ஆகியோரும், ஆண்கள் பிரிவில் ஜோஸ்வா மற்றும் பயிற்சியாளர் சிவசங்கர் உள்ளிட்ட ஏழு பேர், இந்திய அணிக்காக தேர்வாகி உள்ளனர். இவ்வீரர்களை வழியனுப்பும் நிகழ்ச்சி, கோவை பிரஸ் கிளப்பில் நேற்று நடந்தது. தமிழ்நாடு மினி கால்பந்து சங்கத்தின் சேர்மன் மதிவாணன், தலைவர் பரணிதரன், துணை தலைவர், செயலாளர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இது குறித்து, வீராங்கனைகள் கூறுகையில், 'இந்திய அணிக்கான மினி கால்பந்து போட்டியில், விளையாட வாய்ப்பு கிடைத்தது பெருமையாக உள்ளது. அரசு சார்பில், சலுகைகள் கிடைத்தால் எங்களை போன்ற மலைவாழ் பகுதியை சேர்ந்த, விளையாட்டு வீரர்கள் சாதிக்க முடியும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X