பொது செய்தி

தமிழ்நாடு

மாநகராட்சி அதிகாரி போல் நடித்து அபராதம் வசூல்

Added : ஆக 09, 2021
Share
Advertisement
கோவை:பஸ் ஸ்டாண்டில், மாநகராட்சி அதிகாரி போல் நடித்து, அபராதம் விதித்த நபரை, போலீசார் தேடி வருகின்றனர். கோவை காந்திபுரத்தில் உள்ள, மத்திய, நகர பஸ் ஸ்டாண்ட்களில் கடந்த மூன்று நாட்களாக மாநகராட்சி அதிகாரி எனக் கூறிக் கொண்டு, முகக்கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளி கடைபிடிக்காத வியாபாரிகளிடம், அபராதம் வசூலித்து வந்தார்.ஒரே பகுதியில், மூன்று நாட்களாக அவர் அபராத வசூலில்

கோவை:பஸ் ஸ்டாண்டில், மாநகராட்சி அதிகாரி போல் நடித்து, அபராதம் விதித்த நபரை, போலீசார் தேடி வருகின்றனர். கோவை காந்திபுரத்தில் உள்ள, மத்திய, நகர பஸ் ஸ்டாண்ட்களில் கடந்த மூன்று நாட்களாக மாநகராட்சி அதிகாரி எனக் கூறிக் கொண்டு, முகக்கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளி கடைபிடிக்காத வியாபாரிகளிடம், அபராதம் வசூலித்து வந்தார்.ஒரே பகுதியில், மூன்று நாட்களாக அவர் அபராத வசூலில் ஈடுபட்டதால், சந்தேகம் அடைந்த வியாபாரிகள், அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.விசாரணையில், அவர் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்தவர் எனத் தெரிந்தது. மாநகராட்சி அலுவலர் எனக்கூறி, மோசடியாக அபராத வசூலில் ஈடுபட்டதும் தெரிந்தது.அந்நபரை, போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்து விசாரிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், அந்நபர் அங்கிருந்து தப்பியோடினார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X