பொது செய்தி

தமிழ்நாடு

பத்திரப்பதிவு அலுவலகம் மாற்றம் : ஆவண எழுத்தர்கள் எதிர்ப்பு

Added : ஆக 09, 2021
Share
Advertisement
கோவை:சிந்தாமணிப்புதுாரில் செயல்பட்டு வரும், சிங்காநல்லுார் பத்திரப்பதிவு அலுவலகத்தை, வெள்ளலுாருக்கு இடமாற்றம் செய்வதற்கு, ஆவண எழுத்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.சிங்காநல்லுார் பத்திரப்பதிவு அலுவலகம், நீண்ட நாட்களாக சிந்தாமணிப்புதுாரில் வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இதற்கு கடந்த ஆட்சிக்காலத்தில், வெள்ளலுாரில் புதிய அலுவலகம்

கோவை:சிந்தாமணிப்புதுாரில் செயல்பட்டு வரும், சிங்காநல்லுார் பத்திரப்பதிவு அலுவலகத்தை, வெள்ளலுாருக்கு இடமாற்றம் செய்வதற்கு, ஆவண எழுத்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.சிங்காநல்லுார் பத்திரப்பதிவு அலுவலகம், நீண்ட நாட்களாக சிந்தாமணிப்புதுாரில் வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இதற்கு கடந்த ஆட்சிக்காலத்தில், வெள்ளலுாரில் புதிய அலுவலகம் கட்டப்பட்டது.அப்போது திறப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் தோற்றுப்போனது. இந்நிலையில், தற்போது அலுவலகம் மாற்றம் செய்வதற்கான பணிகள், வேகமாக நடந்து வருகின்றன. இதற்கு ஆவண எழுத்தர்கள் மற்றும் தட்டச்சர்கள், எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இது குறித்து, ஆவண எழுத்தர்கள் கூறியதாவது:மதுக்கரை தாலுகாவுக்குட்பட்ட வெள்ளலுாரில், சிங்காநல்லுார் பத்திரப்பதிவு அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. ஆட்கள் நடமாட்டம் போதுமான அளவில் இல்லாத பகுதியில் அமைந்துள்ளதால், பத்திரப்பதிவுக்கு செல்பவர்கள், அங்கு பணப்பரிமாற்றம் செய்வதற்கு உகந்ததாக இருக்காது.சிங்காநல்லுார் பத்திரப்பதிவு அலுவலகத்தை சார்ந்து, அறுபதுக்கும் மேற்பட்ட ஆவண எழுத்தர்கள் தட்டச்சர்கள் பணிபுரிகின்றனர். இதில் பெரும்பான்மையானவர்கள் பெண்களே. இங்கு, பத்திரப்பதிவு செய்ய செல்பவர்களுக்கு, போதுமான பாதுகாப்பு இல்லை.அதனால் சிங்காநல்லுார் பத்திரப்பதிவு எல்லைக்குட்பட்ட பகுதிகளில், பாதுகாப்பு வசதிகள் நிறைந்த இடத்தில், அலுவலகம் அமைக்க வேண்டும்.இவ்வாறு, ஆவண எழுத்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X