பொது செய்தி

தமிழ்நாடு

செஸ் போட்டியில் வெண்கலம்: கோவை மாணவர் கலக்கல்

Added : ஆக 09, 2021
Share
Advertisement
கோவை:ஆசிய அளவிலான, 'ஆன்லைன்' செஸ் போட்டியில், கோவையை சேர்ந்த ஹர்ஷத் மூன்றாமிடம் பிடித்து அசத்தியுள்ளார்.'பிலிப்பைன்ஸ் செஸ் பெடரேஷன்' சார்பில், ஆசிய பள்ளி மாணவர்களுக்கான செஸ் போட்டிகள், ஏழு முதல், 17 வயதுக்குட்பட்டவர்களுக்கு, வயது அடிப்படையில், ஆறு பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்டன. 'ரேபிட்' முறையில் நடந்த போட்டிகளில், 20க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து, 120க்கும்

கோவை:ஆசிய அளவிலான, 'ஆன்லைன்' செஸ் போட்டியில், கோவையை சேர்ந்த ஹர்ஷத் மூன்றாமிடம் பிடித்து அசத்தியுள்ளார்.'பிலிப்பைன்ஸ் செஸ் பெடரேஷன்' சார்பில், ஆசிய பள்ளி மாணவர்களுக்கான செஸ் போட்டிகள், ஏழு முதல், 17 வயதுக்குட்பட்டவர்களுக்கு, வயது அடிப்படையில், ஆறு பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்டன. 'ரேபிட்' முறையில் நடந்த போட்டிகளில், 20க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து, 120க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர்.இதில், கோவை ஸ்டேன்ஸ் பள்ளியில் படிக்கும் ஹர்ஷத், தனி நபர் பிரிவில் வெண்கல பதக்கமும், 15 வயதுக்குட்பட்ட குழு போட்டியில் முதலிடமும் பிடித்தார்.கணபதி எஸ்.இ.எஸ்., பள்ளி மாணவர் ஆகாஷ், 11 வயதுக்குட்பட்ட குழு போட்டியில் பங்கேற்று, முதலிடம் பிடித்தார். வெற்றி பெற்றவர்களை, கோவை சதுரங்க சங்க நிர்வாகிகள் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X