பொது செய்தி

தமிழ்நாடு

ஒலிம்பிக் வீரர்களை கொண்டாட கோவையில் 'செல்பி பாயின்ட்'

Added : ஆக 09, 2021
Share
Advertisement
கோவை:கோவை ரயில்வே ஸ்டேஷனில், ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெறும் இந்திய வீரர்களை கொண்டாடும் விதமாக, 'செல்பி பாயின்ட்' அமைக்கப்பட்டுள்ளது.ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், 32வது ஒலிம்பிக் போட்டி நடந்தது. ஈட்டி எறிதல், பளு துாக்குதல், மல்யுத்தம் உள்ளிட்ட போட்டிகளில் பதக்கங்கள் வென்றுள்ள, நம் நாட்டு விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு, பாராட்டுகள் குவிந்து
 ஒலிம்பிக் வீரர்களை கொண்டாட கோவையில் 'செல்பி பாயின்ட்'

கோவை:கோவை ரயில்வே ஸ்டேஷனில், ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெறும் இந்திய வீரர்களை கொண்டாடும் விதமாக, 'செல்பி பாயின்ட்' அமைக்கப்பட்டுள்ளது.ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், 32வது ஒலிம்பிக் போட்டி நடந்தது. ஈட்டி எறிதல், பளு துாக்குதல், மல்யுத்தம் உள்ளிட்ட போட்டிகளில் பதக்கங்கள் வென்றுள்ள, நம் நாட்டு விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு, பாராட்டுகள் குவிந்து வருகின்றன.இந்நிலையில், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற விளையாட்டு வீரர்களை கொண்டாடி கவுரவிக்கும் விதமாக, கோவை ரயில்வே ஸ்டேஷன் நுழைவு வாயிலில், 'செல்பி பாயின்ட்' அமைக்கப்பட்டுள்ளது. அதில், 'ஐ சீர் பார் இந்தியா' என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது. இதன் முன்பு, பயணிகள் ஆர்வமுடன் செல்பி எடுத்து, சமூக வலைதளங்களில் பகிர்ந்து, வெற்றி பெற்ற வீரர்களையும் கொண்டாடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X