பெண் கை நரம்பில் சிக்கிய ஊசி! வெற்றிகரமாக அகற்றிய டாக்டர்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பெண் கை நரம்பில் சிக்கிய ஊசி! வெற்றிகரமாக அகற்றிய டாக்டர்கள்

Added : ஆக 09, 2021
Share
கோவை:பெண்ணின் கை நரம்பில் உடைந்து சிக்கிய ஊசியை, அறுவை சிகிச்சை மூலம் டாக்டர்கள் வெற்றிகரமாக அகற்றினர். ஊட்டி ராஜ்பவன் குடியிருப்பை சேர்ந்தவர் சுரேஷ்பகதுார், 32; கூலித்தொழிலாளி. இவரது மனைவி சஞ்சனா, 28. கர்ப்பிணியான சஞ்சனா கடந்த, 4ம் தேதி பிரசவத்துக்காக, ஊட்டி சேட் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் அவருக்கு குழந்தை பிறந்தது.இந்நிலையில், அவருக்கு
 பெண் கை நரம்பில் சிக்கிய ஊசி! வெற்றிகரமாக அகற்றிய டாக்டர்கள்

கோவை:பெண்ணின் கை நரம்பில் உடைந்து சிக்கிய ஊசியை, அறுவை சிகிச்சை மூலம் டாக்டர்கள் வெற்றிகரமாக அகற்றினர். ஊட்டி ராஜ்பவன் குடியிருப்பை சேர்ந்தவர் சுரேஷ்பகதுார், 32; கூலித்தொழிலாளி. இவரது மனைவி சஞ்சனா, 28. கர்ப்பிணியான சஞ்சனா கடந்த, 4ம் தேதி பிரசவத்துக்காக, ஊட்டி சேட் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் அவருக்கு குழந்தை பிறந்தது.இந்நிலையில், அவருக்கு குடும்பக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ள, முடிவு செய்யப்பட்டது. கையில் குளூக்கோஸ் ஏற்றுவதற்காக ஊசி பொருத்தப்பட்டது. அதை அகற்ற முயன்ற போது, ஊசி உடைந்து, கை நரம்பில் சிக்கியது.நரம்பில் சிக்கிய ஊசியின் உடைந்த பாகத்தை அகற்ற, அறுவை சிகிச்சை கட்டாயமானது. அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு, அனுப்பி வைக்கப்பட்டார்.நேற்று முன்தினம் இரவு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சஞ்சனாவுக்கு, டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம், மூன்று செ.மீ., நீளமுடைய ஊசியின் உடைந்த பாகத்தை, வெற்றிகரமாக அகற்றினர். சஞ்சனா உடல் நலம் தேறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X