பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய தடகளத்தில் தடம் பதித்த கோவை வீரர்களுக்கு பாராட்டு

Added : ஆக 09, 2021
Share
Advertisement
கோவை:தேசிய அளவிலான தடகள போட்டியில், கோவையை சேர்ந்த டொனால்ட் மும்முறை தாண்டுதலில் தங்க பதக்கமும்; மாணவிகள் பிரிவில் ஒலிம்பா ஸ்டெபி 400 மீ., தடை ஓட்டத்தில், வெள்ளி பதக்கமும் வென்று அசத்தியுள்ளனர். அகில இந்திய தடகள சம்மேளனம் சார்பில், 20 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான 19வது தேசிய அளவிலான தடகள போட்டிகள், பஞ்சாப் மாநிலத்தில், கடந்த வாரம் நடந்தது. இந்தியாவில் உள்ள பல்வேறு

கோவை:தேசிய அளவிலான தடகள போட்டியில், கோவையை சேர்ந்த டொனால்ட் மும்முறை தாண்டுதலில் தங்க பதக்கமும்; மாணவிகள் பிரிவில் ஒலிம்பா ஸ்டெபி 400 மீ., தடை ஓட்டத்தில், வெள்ளி பதக்கமும் வென்று அசத்தியுள்ளனர். அகில இந்திய தடகள சம்மேளனம் சார்பில், 20 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான 19வது தேசிய அளவிலான தடகள போட்டிகள், பஞ்சாப் மாநிலத்தில், கடந்த வாரம் நடந்தது. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களிலிருந்து, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 100மீ., 200மீ., 400மீ., 800மீ., உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், மும்முறை தாண்டுதல் உள்ளிட்ட, 22 பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. இப்போட்டியில், கோவையிலிருந்து நான்கு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். அதில், பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரியில் படிக்கும் டொனால்ட், மும்முறை தாண்டுதலில், 15.76 மீ., தாண்டி தங்கப்பதக்கம் வென்றார். மாணவிகளுக்கான 400மீ., தடை தாண்டி ஓட்டத்தில், கிருஷ்ணம்மாள் கல்லுாரியின் ஒலிம்பா ஸ்டெபி, வெள்ளி பதக்கம் வென்றார். முதலிடம் பிடித்த டொனால்ட், கென்யாவில் வரும், 17ல் நடக்கவுள்ள உலக ஜூனியர் தடகள போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இவ்வீரர், வீராங்கனைகளை தமிழ்நாடு தடகள செயலாளர் லதா, பயிற்சியாளர் முகமது நிஜாமுதீன் உள்ளிட்ட பலர் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X