நீர்நிலைகளில் கூட்டம்; தொற்று பரவும் அபாயம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நீர்நிலைகளில் கூட்டம்; தொற்று பரவும் அபாயம்

Added : ஆக 09, 2021
Share
தொண்டாமுத்தூர்:தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், நீர்நிலைகளில் பொதுமக்கள் அதிக அளவில் திரண்டு வருவதால், தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.கோவையில், கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில், தொண்டாமுத்தூர் வட்டாரப் பகுதியில் உள்ள சித்திரைச்சாவடி தடுப்பணை, குனியமுத்தூர் தடுப்பணை, சின்னாறு உள்ளிட்ட
 நீர்நிலைகளில் கூட்டம்; தொற்று பரவும் அபாயம்

தொண்டாமுத்தூர்:தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், நீர்நிலைகளில் பொதுமக்கள் அதிக அளவில் திரண்டு வருவதால், தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.கோவையில், கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில், தொண்டாமுத்தூர் வட்டாரப் பகுதியில் உள்ள சித்திரைச்சாவடி தடுப்பணை, குனியமுத்தூர் தடுப்பணை, சின்னாறு உள்ளிட்ட நீர்நிலைகளில் குளிப்பதற்காக, நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.வார விடுமுறை தினம் மற்றும் விசேஷ நாட்களில், சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமல்லாது, கோவையின் பல்வேறு பகுதியில் இருந்தும், குடும்பத்துடன் ஏராளமானோர் வந்து, நீரில் விளையாடி செல்கின்றனர்.கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், நீர்நிலைகளில் திரளும் மக்களால், தொற்று மேலும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X