பொது செய்தி

தமிழ்நாடு

கே.கே.புதுாரில் விளக்கு எரியலை; கேட்க ஆளில்லை!

Added : ஆக 09, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கலெக்டர் ஆபீசிலேயே இந்நிலைகலெக்டர் அலுவலக வளாகத்தில், நோ பார்க்கிங் அறிவிப்பு பலகையின் அருகிலேயே, வாகனங்கள் விதிமீறி நிறுத்தப்படுகின்றன.-- கார்த்திக், காந்திபுரம்.சாக்கடை கால்வாய் அடைப்புபோத்தனுார், செங்கோட்டையா காலனியில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் தேங்கியுள்ளது. கொசு உற்பத்தியாகிறது. துாய்மை பணியாளர்கள் இப்பகுதிக்கு வருவதில்லை.- மகேந்திரன்,

கலெக்டர் ஆபீசிலேயே இந்நிலைகலெக்டர் அலுவலக வளாகத்தில், நோ பார்க்கிங் அறிவிப்பு பலகையின் அருகிலேயே, வாகனங்கள் விதிமீறி நிறுத்தப்படுகின்றன.-- கார்த்திக், காந்திபுரம்.

சாக்கடை கால்வாய் அடைப்புபோத்தனுார், செங்கோட்டையா காலனியில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் தேங்கியுள்ளது. கொசு உற்பத்தியாகிறது. துாய்மை பணியாளர்கள் இப்பகுதிக்கு வருவதில்லை.- மகேந்திரன், சாரதாமில் ரோடு.

இருளின் பிடியில் மேட்டூர்மாநகராட்சி, நுாறாவது வார்டுக்கு உட்பட்ட, போத்தனுார், மேட்டூர் ரோடு, நாச்சிமுத்து கவுண்டர் வீதியில் உள்ள, மின் கம்பங்களில் (எண்: 18, 19, 45, 51) பல மாதங்களாக விளக்கு எரிவதில்லை. இப்பகுதியில் தெருநாய்கள் தொல்லையும் அதிகம் உள்ளதால், மக்கள் அச்சப்படுகின்றனர்.- சரவணன், நாச்சிமுத்து கவுண்டர் வீதி.

ஆவின் முன் விளக்கு இல்லைசிறுவாணி ரோடு, பேரூர் பச்சாபாளையம், ஆவின் முன்புறம் உள்ள, தெருவிளக்குகள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக எரிவதில்லை.- முருகேசன், பச்சாபாளையம்.

குப்பை அள்ளுவதில்லைராமநாதபுரம், நஞ்சுண்டாபுரம் ரோடு, ஸ்ரீபதி நகரில், சாலையோரம் குவிந்துள்ள குப்பை அள்ளப்படாமல் உள்ளது; சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- ராஜ்மோகன்,

ஸ்ரீபதி நகர்.

விளக்கு எரிஞ்சு ரொம்ப நாளாச்சு!மாநகராட்சி, 44வது வார்டுக்கு உட்பட்ட, கே.கே.புதுார், பி.வி.கிருஷ்ணன் ரோடு, ராமலிங்க நகர் முதல் வீதியில் உள்ள, மின் கம்பத்தில் (எண்: 10) கடந்த சில மாதங்களாக, விளக்கு எரிவதில்லை. பலமுறை மின் வாரியத்தில் தெரிவித்தும், நடவடிக்கை இல்லை.- ராஜகோபால், கே.கே.புதுார்.

கழிவுநீர் செல்ல வழியில்லைகணபதி, ஜி.எம்.திருமண மண்டபம் அருகில், சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால், கழிவுநீர் குழியில் தேங்கியுள்ளது; துர்நாற்றம் வீசுகிறது.- தனா, கணபதி.

சாலையை சீரமைக்கணும்மாநகராட்சி, 66வது வார்டுக்கு உட்பட்ட, ராஜேஸ்வரி நகரில், சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இங்குள்ள குழியில், தண்ணீர் தேங்குகிறது. இச்சாலையை சீரமைக்க வேண்டும்.- தேவதாஸ், ராஜேஸ்வரி நகர்.

குடிநீர் வினியோகம் சீராகஇல்லைவெள்ளக்கிணர் அரசு குடியிருப்பு அருகே உள்ள, சவுடாம்பிகா நகர், ராகவேந்திரா நகருக்கு, குடிநீர் வினியோகம் சீராக இல்லாததால், குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.-ராஜா, சவுடாம்பிகா நகர்.

பாதியில் நிற்குது சாலை பணிவேடபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட, கே.வி.பி.நகரில், சாலை சீரமைக்க, சில மாதங்களுக்கு முன், பணி துவக்கப்பட்டு, ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன. இத்துடன் பணி அப்படியே கைவிடப்பட்டுள்ளது. சாலை முழுவதும் ஜல்லிக்கற்கள் இருப்பதால், இப்பகுதி மக்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.- கீர்த்தி, கே.வி.பி.நகர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-ஆக-202115:08:22 IST Report Abuse
Ram Pollachi நூறு யூனிட் மின்சாரம் இலவசமாக கிடைக்குது அதை தெரு கம்பத்தில் சொருகினால் வேலை முடிந்தது. பகலில் எறியும் மின் விளக்குகளை பற்றி மி.வா. தகவல் தரவே மாட்டார்கள். எங்கும் எதிலும் சுயநலம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X