பொது செய்தி

தமிழ்நாடு

'கண்டம் துண்டமாக வெட்டிருவோம்': மிரட்டியதாக சுகாதார ஆய்வாளர், டிரைவர்கள் மீது புகார்

Added : ஆக 09, 2021
Share
Advertisement
குனியமுத்தூர்:தகவல் அறியும் சட்டத்தின் கீழ், தகவல்களை கேட்டவரின் வீட்டாருக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குனியமுத்தூர் அருகேயுள்ள ஞானபுரத்தை சேர்ந்தவர் பழனிசாமி, 40; கோவை மாநகர் மாவட்ட பா.ஜ., எஸ்.சி., எஸ்.டி., பிரிவின் மாவட்ட பொது செயலாளர்.இவர் ஜூன், 16ல் மாநகராட்சி தெற்கு மண்டல உதவி கமிஷனருக்கு, தகவலறியும் உரிமை சட்டத்தில்,

குனியமுத்தூர்:தகவல் அறியும் சட்டத்தின் கீழ், தகவல்களை கேட்டவரின் வீட்டாருக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குனியமுத்தூர் அருகேயுள்ள ஞானபுரத்தை சேர்ந்தவர் பழனிசாமி, 40; கோவை மாநகர் மாவட்ட பா.ஜ., எஸ்.சி., எஸ்.டி., பிரிவின் மாவட்ட பொது செயலாளர்.இவர் ஜூன், 16ல் மாநகராட்சி தெற்கு மண்டல உதவி கமிஷனருக்கு, தகவலறியும் உரிமை சட்டத்தில், மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் குப்பைகழிவுகள் எடுத்துச் செல்ல உள்ள வாகனங்களின் எண்ணிக்கை, உபயோகத்தில் உள்ளது, இல்லாதது, டீசல் செலவு உள்ளிட்ட விபரங்கள் கேட்டுள்ளார்.ஜூலை 20ல் வந்த பதில் கடிதத்தில், விபரங்கள் சரியாக குறிப்பிடப்படவில்லை. இதையடுத்து, 26ல் மாநகராட்சி கமிஷனருக்கு விபரம் கோரி, மேல்முறையீடு செய்தார்.இந்நிலையில் கடந்த, 5ல் 30 பேர் கும்பல் இவரது வீட்டிற்கு வந்து மிரட்டிச் சென்றது. இதுகுறித்து பழனிசாமி, குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.சம்பவம் குறித்து பழனிசாமி கூறியதாவது:டீசல் பயன்பாடு குறித்து நான் விபரம் கேட்டேன். சுகாதார ஆய்வாளர் லோகநாதன், டிரைவர்களிடம் தவறான தகவலை கூறியுள்ளார். டிரைவர்கள் அருணாசலம், மோகன், ரவி உள்பட, 28 பேர், எனது வீட்டிற்கு வந்து, என்னை எங்கே என கேட்டுள்ளனர்.நான் இல்லாததால், வீட்டினுள் புகுந்து தேடியுள்ளனர். பின், வீட்டிலிருந்த பெண்களிடம் 'அவரை ஒழுங்காக இருக்கச் சொல். இல்லையெனில் கண்டம், துண்டமாக வெட்டி வீசி விடுவோம். மீறினால் குடும்பத்தோடு அனைவரையும் வீட்டினுள் வைத்து எரித்து விடுவோம்' என கூறியுள்ளனர்.நான் போலீசாருக்கு தகவல் தெரிவித்தேன். அவர்கள் வருவதை கண்டு ஓடி விட்டனர். நான் வீடியோ ஆதாரத்துடன் புகார் கொடுத்தேன். மனு பெற்றதற்கான ரசீது போட்டு கொடுத்துள்ளனர். விசாரித்து, எப்.ஐ.ஆர்., போடுவோம் என கூறியுள்ளனர்.புகார் கொடுத்ததை அடுத்து, டிரைவர் அருணாசலம் மொபைல்போனில் என்னிடம் பேசினார். அப்போது, "நீ யாரிடம் வேண்டுமானாலும் புகார் கொடு. யாரும் எதுவும் செய்ய முடியாது. என்ன, மீறினால் டிரான்ஸ்பர்தான பண்ணுவாங்க. வேற எதுவும் செய்ய முடியாதுல்ல. பார்த்துக்கலாம்," என மிரட்டல் விடுத்து பேசினார்.இதனை நான் பதிவு செய்துள்ளேன். டீசல் செலவில் ஊழல் செய்வதால்தான், இவர்கள் எனக்கு மிரட்டல் விடுக்கின்றனர்.இவ்வாறு, பழனிசாமி கூறினார்.வீடியோ ஆதாரத்துடன் புகார் கொடுக்கப்பட்டும், போலீசார் வழக்கு பதிவு செய்யாதது ஏன் என்பது கேள்விக்குறியாக உள்ளது. போலீசார் நடவடிக்கை எப்போது?

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X