சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆடிட்டரிடம் மொபைல்போன் ரொக்கம் பறிப்பு

Added : ஆக 09, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
செட்டிபாளையம்:கிணத்துக்கடவு அருகேயுள்ள அரசம்பாளையத்தை சேர்ந்தவர் புஷ்பராஜ், 39; தனியார் நிறுவன ஆடிட்டர். சம்பவத்தன்று இரவு பணி முடிந்து, புஷ்பராஜ் தனது பைக்கில், கோவை - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில், வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.மலுமிச்சம்பட்டி, முருகன் நகர் போஸ்ட் ஆபீஸ் அருகே செல்லும்போது, இருவர் பைக்கை வழிமறித்தனர். புஷ்பராஜின் மொபைல்போன், 700 ரூபாய் ரொக்கம்

செட்டிபாளையம்:கிணத்துக்கடவு அருகேயுள்ள அரசம்பாளையத்தை சேர்ந்தவர் புஷ்பராஜ், 39; தனியார் நிறுவன ஆடிட்டர். சம்பவத்தன்று இரவு பணி முடிந்து, புஷ்பராஜ் தனது பைக்கில், கோவை - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில், வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.மலுமிச்சம்பட்டி, முருகன் நகர் போஸ்ட் ஆபீஸ் அருகே செல்லும்போது, இருவர் பைக்கை வழிமறித்தனர். புஷ்பராஜின் மொபைல்போன், 700 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை பறித்தனர்.புஷ்பராஜ் சத்தம் போடவும், இருவரும் அங்கிருந்து தப்பினர். அவர்களை துரத்திச் சென்ற அப்பகுதியினரிடம், ஒருவர் சிக்கினார்.செட்டிபாளையம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். விசாரணையில், ரத்தினபுரியை சேர்ந்த பிரதீப்குமார், 21 என்பதும், தப்பியது செட்டிபாளையத்தை சேர்ந்த இஷாத் அலி, 21 எனவும் தெரிய வந்தது.மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்ட பிரதீப்குமார், சிறையில் அடைக்கப்பட்டார். இஷாத் அலியை தேடுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-ஆக-202116:18:00 IST Report Abuse
Ram Pollachi இன்று காலை 9 மணியளவில் வாய்க்கால் மேடு (முதியோர் இல்லம்) தே.நெ. 83 ல் சில்வர் வண்ணத்தில் டிரோன் மாதிரி 50 அடி உயரத்தில் பறந்து சென்றது. அதையும் யார் விட்டார்கள் என்று கண்டுபிடிக்க வேண்டும் சார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X