பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டிலேயே கவுரவிக்க வேண்டும்: தியாகிகள் குடும்பத்தினர் கோரிக்கை

Added : ஆக 09, 2021
Share
Advertisement
சென்னை: ‛‛கொரோனா பரவல் அச்சுறுத்தலால், வரும் சுதந்திர தினத்தில், கடந்தாண்டைப் போலவே, வீடுகளிலேயே தியாகிகளை கவுரவிக்க வேண்டும்,'' என, அவர்களது குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.ஆண்டுதோறும் குடிரயசு தினம் மற்றும் சுதந்திர தினத்தன்று, சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு, அரசு சார்பில் பொன்னாடை அணிவித்து, பரிசு வழங்கி கவுரவிப்பது வழக்கம். சென்னை மாவட்டத்தில், 16 சுதந்திர

சென்னை: ‛‛கொரோனா பரவல் அச்சுறுத்தலால், வரும் சுதந்திர தினத்தில், கடந்தாண்டைப் போலவே, வீடுகளிலேயே தியாகிகளை கவுரவிக்க வேண்டும்,'' என, அவர்களது குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
ஆண்டுதோறும் குடிரயசு தினம் மற்றும் சுதந்திர தினத்தன்று, சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு, அரசு சார்பில் பொன்னாடை அணிவித்து, பரிசு வழங்கி கவுரவிப்பது வழக்கம். சென்னை மாவட்டத்தில், 16 சுதந்திர போராட்ட தியாகிகள் வசிக்கின்றனர். கொரோனாவால் கடந்தாண்டு, தியாகிகளின் வீட்டிற்கே சென்று அதிகாரிகள் அவர்களை கவுரவித்தனர். அதே போல், வரும் ஆக., 15 சுதந்திர தினத்தில், தியாகிகள் அவர்களின் வீடுகளிலேயே கவுரவிக்கப்பட வேண்டும் என, அவர்களது குடும்பத்தினர் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து, வியாசர்பாடியில் வசிக்கும் சுதந்திர போராட்ட தியாகி கபூரின் மகன் யாகூப், 45, கூறியதாவது:
கொரோனா பரவல் காரணமாக, கடந்தாண்டு, தியாகிகளின் வீடுகளிலேயே அரசு சார்பில் கவுரவித்தனர். 100 வயதுடைய என் தந்தையை, பெரம்பூர் தாசில்தார் கவுரவித்தார். தற்போதும், தொற்று பரவல் அச்சுறுத்தல் இருப்பதால், வரும் சுதந்திர தினத்திலும், அவரவர் வீடுகளிலேயே கவுரவிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X