பொது செய்தி

இந்தியா

ஸ்டேஷன்களில் கைதிகள் சித்ரவதை; தலைமை நீதிபதி வேதனை

Updated : ஆக 09, 2021 | Added : ஆக 09, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
புதுடில்லி: ''நம் நாட்டில் இன்றும் போலீஸ் ஸ்டேஷன்களில் கைதிகளை சித்ரவதை செய்வது தொடர்கிறது,'' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா வேதனை தெரிவித்துள்ளார்.டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் சட்ட உதவிக்கான 'மொபைல் ஆப்' சேவையை துவக்கி வைத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேசியதாவது:இந்த சமூகம் சட்டத்தால் நிர்வாகம் செய்யப்படுகிறது. சலுகை

புதுடில்லி: ''நம் நாட்டில் இன்றும் போலீஸ் ஸ்டேஷன்களில் கைதிகளை சித்ரவதை செய்வது தொடர்கிறது,'' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா வேதனை தெரிவித்துள்ளார்.



latest tamil news



டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் சட்ட உதவிக்கான 'மொபைல் ஆப்' சேவையை துவக்கி வைத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேசியதாவது:
இந்த சமூகம் சட்டத்தால் நிர்வாகம் செய்யப்படுகிறது. சலுகை பெற்றவர்களுக்கும், சாதாரண குடிமக்களும் நீதியை பெறுவதில் உள்ள இடைவெளியை குறைக்க வேண்டியது மிகவும் அவசியம். நாட்டு மக்கள் அனைவரும் எந்த தடையும் இன்றி அணுகி நீதியை பெறும் சூழலை உருவாக்க வேண்டும்.
குடிமக்களின் நம்பிக்கையை பெறவே நீதித்துறை விரும்புகிறது. நம் கடந்த காலம், எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடாது. தேசிய சட்டப் பணிகள் ஆணையம் சமூகத்தின் அடித்தட்டு மக்களும் நீதியை பெற உதவ வேண்டும். இந்த மொபைல் ஆப் வாயிலாக ஏழைகளும் சட்ட உதவி பெற உதவ வேண்டும்.
போலீஸ் ஸ்டேஷன்களில் மனித உரிமைகளுக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. போலீஸ் காவலில் இருக்கும் கைதிகள் கடுமையாக சித்ரவதை செய்யப்படுவது இன்றும் தொடருகிறது என்பது வேதனையானது.


latest tamil news



அரசியல் அமைப்பு சட்டம், மனித உரிமை எல்லாம் இருந்தும் சரியான சட்ட உதவி இல்லாததால் கொடுமை நடக்கிறது. விழிப்புணர்வு'தேர்ட் டிகிரி ட்ரீட்மென்ட்' எனப்படும் சித்ரவதை நடப்பது மிகவும் கொடுமை. மனித உரிமை மற்றும் அரசியலமைப்புச் சட்டம் ஆகியவை குறித்து போலீஸ் அதிகாரிகளுக்கு தேசிய சட்டப் பணிகள் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
15-ஆக-202112:23:37 IST Report Abuse
Swaminathan Chandramouli மேதகு நீதிபதி அவர்களே நீங்கள் உச்ச நீதி மன்றத்தின் முதன்மை நீதிபதி நீங்கள் போலீஸ் நிலையங்களில் கைதிகளை சித்திரவதை செய்யும் கொடுமைகளை பார்த்து வருத்தப்படுகிறீர்கள் எந்த நீதிமன்றமாக இருந்தாலும் சரி இந்த கொடூர நிகழ்ச்சியை தடுக்க தாமாகவே முன் வந்து சம்பந்தப்பட்ட பட்ட கொடுங்கோலர்கள் மீது சட்ட பூர்வ நவடிக்கை எடுத்து தண்டிக்கலாமே அதை விட்டுவிட்டு வெறும் வருத்தங்களை வெளிக்காண்பிப்பது சரியா ?
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
09-ஆக-202116:50:15 IST Report Abuse
DVRR அப்போ ஒங்க நண்பன் நீதிபதியை ஆட்டோ அடுத்து கொன்ற கைதிகளுக்கு நடக்கும் சித்திரவதை உங்களுக்கு தவறு என்று படுகின்றதா அநீதிபதி அவர்களே??????
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
09-ஆக-202115:56:02 IST Report Abuse
Vijay D Ratnam பின்ன அரசியல்வியாதிகளிடம் காட்ட முடியுமா, உரிச்சி எடுத்துடுவாய்ங்க. மாஃபியாக்களிடம் காட்ட முடியுமா குடும்பத்தையே பஸ்பம் ஆக்கிடுவாய்ங்க. தாதாக்களிடம் காட்ட முடியமா நடு ரோட்டுல ஓடவிட்டு பொளந்திடுவாய்ங்க. வேறு யாரிடம் அவர்கள் வீராப்பை காட்ட முடியும். அடிச்சா எவனும் கேட்க வரமாட்டான் என்று கன்ஃபார்ம் பண்ணிக்கிட்டுதான் மேலே கைவைப்பார்கள். அவர்களை குறை சொல்ல முடியாது. போலீசுக்கு பயந்துதான் பெரும்பாலோர் தவறு செய்ய பயப்படுகிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X