பொது செய்தி

தமிழ்நாடு

கடைமடையை அடைந்த பி.ஏ.பி., நீர்!

Added : ஆக 09, 2021
Share
Advertisement
பொங்கலுார்;திருமூர்த்தி அணையில் இருந்து நான்காம் மண்டல பாசனத்திற்கு ஆடிப்பெருக்கு அன்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. பின், தண்ணீர் விடுவது நிறுத்தப்பட்டு இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் திறக்கப்பட்டது.இந்த ஆண்டு குடிமராமத்து பணி நடக்காததால் வழியெங்கும் கழிவுகளே நிரம்பியிருந்தது. தண்ணீரின் வேகத்தில் அவை அடித்துவரப்பட்டு பல்வேறு இடங்களில் தேங்கி தண்ணீர்
 கடைமடையை அடைந்த பி.ஏ.பி., நீர்!

பொங்கலுார்;திருமூர்த்தி அணையில் இருந்து நான்காம் மண்டல பாசனத்திற்கு ஆடிப்பெருக்கு அன்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. பின், தண்ணீர் விடுவது நிறுத்தப்பட்டு இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் திறக்கப்பட்டது.இந்த ஆண்டு குடிமராமத்து பணி நடக்காததால் வழியெங்கும் கழிவுகளே நிரம்பியிருந்தது. தண்ணீரின் வேகத்தில் அவை அடித்துவரப்பட்டு பல்வேறு இடங்களில் தேங்கி தண்ணீர் செல்வது தடைபட்டது. முதலில் குறைந்த அளவு தண்ணீர் திறக்கப்பட்டு கழிவுகள் அவசர அவசரமாக அகற்றப்பட்டன. பின் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டது.திருமூர்த்தி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் தற்போது கடைமடையை எட்டியுள்ளது.மழையின்றி நிலத்தடி நீர்மட்டம் சரிந்துள்ள நிலையில், தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X