பொது செய்தி

தமிழ்நாடு

உற்பத்தியாளர் சங்கங்கள் இன்று ஆலோசனை

Added : ஆக 09, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூரில் ஆறு ஆடை உற்பத்தியாளர் சங்கம் - எட்டு தொழிற்சங்கங்கள் இடையே, பனியன் தொழிலாளருக்கு சம்பள உயர்வு வழங்குவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இருதரப் பினரிடையே நேருக்குநேர் முதல் சுற்று பேச்சுவார்த்தை, கடந்த 4ம் தேதி நடந்தது.தொழிற்சங்க தரப்பினர், 90 சதவீத சம்பள உயர்வு; 15 ஆயிரத்துக்கு மேல் உயரும் ஒவ்வொரு விலைவாசி புள்ளிக்கும், 30 பைசா பஞ்சப்படி

திருப்பூர்:திருப்பூரில் ஆறு ஆடை உற்பத்தியாளர் சங்கம் - எட்டு தொழிற்சங்கங்கள் இடையே, பனியன் தொழிலாளருக்கு சம்பள உயர்வு வழங்குவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இருதரப் பினரிடையே நேருக்குநேர் முதல் சுற்று பேச்சுவார்த்தை, கடந்த 4ம் தேதி நடந்தது.தொழிற்சங்க தரப்பினர், 90 சதவீத சம்பள உயர்வு; 15 ஆயிரத்துக்கு மேல் உயரும் ஒவ்வொரு விலைவாசி புள்ளிக்கும், 30 பைசா பஞ்சப்படி கேட்கின்றனர். முதல் சுற்றில், 24 சதவீத சம்பள உயர்வும், 14.5 பைசா பஞ்சப்படி வழங்க, உற்பத்தியாளர் சங்கத்தினர் சம்மதித்தனர். ஆனால், தொழிற்சங்கத்தினர், மேலும் கூடுதல் விகித சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றனர்.இதையடுத்து, பேச்சுவார்த்தையில் அங்கம் வகிக்கும் 'சைமா', ஏற்றுமதியாளர் சங்கம், 'டீமா', 'நிட்மா', 'சிம்கா' ஆகிய உற்பத்தியாளர் சங்க பிரதிநிதிகள், இன்று மாலை, 5:00 மணிக்கு தங்களுக்குள் கூடி ஆலோசனை நடத்துகின்றனர். ஹார்வி ரோட்டில் உள்ள 'சைமா' அரங்கில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.இன்றைய ஆலோசனைக்குப்பின், தொழிற்சங்கங்களுடனான இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை நடைபெறும் தேதியை, உற்பத்தியாளர் சங்கங்கள் இணைந்து அறிவிக்க உள்ளன.தொழிற்சங்கங்களுடன், எத்தனை சதவீத சம்பள உயர்வு வரை விட்டுக்கொடுத்து பேசலாம்; தொழிற் சங்கங்கள் மொத்தம் 16 கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. சம்பள உயர்வு, பஞ்சப்படி நீங்கலாக உள்ள கோரிக்கைகள் குறித்து எத்தகைய முடிவு எடுப்பது;தொழிற்சங்கங்களுடன் சுமூகமாக பேசி, விரைந்து ஒப்பந்தம் மேற்கொள்ள என்னென்ன வழிமுறைகளை கையாளலாம் என்பது குறித்த முக்கியமான முடிவுகள் எடுக்கப்படுகின்றன.ஆலோசனை கூட்ட முடிவு அடிப்படையில், தொழிற்சங்கங்களுடனான இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தையில், உற்பத்தியாளர் சங்கத்தினர் தங்கள் கருத்துக்களை முன்வைத்து பேசுவர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X