பொது செய்தி

தமிழ்நாடு

மாயமான சமூக இடைவெளி கண்டுகொள்ளாத அதிகாரிகள்

Added : ஆக 09, 2021
Share
Advertisement
திருப்பூர்:தென்னம்பாளையத்தில் காய்கறி மார்க்கெட் செயல்படுகிறது. விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை பல்வேறு பகுதியில் இருந்து மொத்தமாக காய்கறிகளை வாங்க குடும்பத்தினருடன் பலர் வருகின்றனர்.இரண்டாவது அலை பரவல், ஊரடங்கு தளர்வின் போது, மார்க்கெட் செயல்பட நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.நேற்று எந்தவித கட்டுப்பாடுகளும் முன்கூட்டியே வியாபாரிகளுக்கு

திருப்பூர்:தென்னம்பாளையத்தில் காய்கறி மார்க்கெட் செயல்படுகிறது. விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை பல்வேறு பகுதியில் இருந்து மொத்தமாக காய்கறிகளை வாங்க குடும்பத்தினருடன் பலர் வருகின்றனர்.இரண்டாவது அலை பரவல், ஊரடங்கு தளர்வின் போது, மார்க்கெட் செயல்பட நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.நேற்று எந்தவித கட்டுப்பாடுகளும் முன்கூட்டியே வியாபாரிகளுக்கு தெரிவிக்கப்படவில்லை.இதனால், தென்னம் பாளையம் சிக்னல் முதல் பஸ் ஸ்டாண்ட் வரும் ரோட்டில் இருபுறமும், 50க்கும் அதிகமான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு, சமூக இடைவெளி இல்லாமல் சுறுசுறுப்பாக விற்பனை நடந்தது.''ஞாயிற்றுக்கிழமை இப்பகுதியில் முழுஊரடங்கு; கடைகள் செயல்படாது'' என இரு தினங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டிருந்தும், நேற்று கூட்டத்துடன் கடைகள் செயல்பட்டது.தென்னம்பாளையம் மார்க்கெட்டில் காய்கறி கடைகளுக்கு இடையே இடைவெளி இல்லை. நேற்று காய்கறி வாங்க வழக்கம் போல், அதிகளவில் மக்கள் வந்ததால், நெரிசல் அதிகரித்து சமூக இடைவெளி மாயமானது.சரிவர முககவசம் அணியாமலும், ஒருவருக்கொருவர் இடைவெளி கடைபிடிக்காமலும் காய்கறி வாங்கி சென்றனர். போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X