சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவி அடித்துக் கொலை: நாடகமாடிய கணவர் கைது

Added : ஆக 09, 2021
Share
Advertisement
மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே மனைவியை அடித்து கொலை செய்துவிட்டு, பாம்பு கடித்து இறந்ததாக நாடகமாடிய கணவர் கைது செய்யப்பட்டார்.மாமல்லபுரம் அடுத்த, பையனுாரைச் சேர்ந்த ரவிக்குமார், 40; டெய்லர். இவரது மனைவி ஆனந்தி, 33; தனியார் கல்லுாரியில் கேன்டீன் ஊழியர். தம்பதிக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். ரவிக்குமாரின் குடிப்பழக்கத்தால், தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே மனைவியை அடித்து கொலை செய்துவிட்டு, பாம்பு கடித்து இறந்ததாக நாடகமாடிய கணவர் கைது செய்யப்பட்டார்.
மாமல்லபுரம் அடுத்த, பையனுாரைச் சேர்ந்த ரவிக்குமார், 40; டெய்லர். இவரது மனைவி ஆனந்தி, 33; தனியார் கல்லுாரியில் கேன்டீன் ஊழியர். தம்பதிக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். ரவிக்குமாரின் குடிப்பழக்கத்தால், தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். பின், மீண்டும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.நேற்று முன்தினம் இரவும், ரவிக்குமார் மது போதையில் ஆனந்தியிடம் தகராறில் ஈடுபட்டார்.
பின் நள்ளிரவில் துாங்கிக் கொண்டிருந்த ஆனந்தியை, கிரிக்கெட் ஸ்டெம்ப்பால் ரவிக்குமார் தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் இறந்து கிடப்பதை குடும்பத்தினர் கண்டனர். பாம்பு கடித்து இறந்ததாக கணவர் நாடகமாடினார்.
தகவலறிந்து வந்த மாமல்லபுரம் போலீசார், ஆனந்தியின் உடலை பிரேத பரிசோதனைக்கு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். இதில், ரவிக்குமார் தாக்கியதில் தான், ஆனந்தி இறந்தது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் ரவிக்குமாரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X