பொது செய்தி

தமிழ்நாடு

நல வாரிய பதிவு எளிமையாகுமா?

Added : ஆக 09, 2021
Share
Advertisement
திருப்பூர்:ஏ.ஐ.டி.யு.சி., கட்டட தொழிலாளர் சங்க மாவட்ட கோரிக்கை மாநாடு, திருப்பூரில் நேற்று நடந்தது.கட்டட சங்க மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமைவகித்தார். ஏ.ஐ.டி.யு.சி., மாநில செயலாளர் சின்னசாமி, இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் ரவி உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.மாவட்டத்தில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டட தொழிலாளர் பணிபுரிந்து வருகின்றனர். ஆனால், அரசு நலவாரியத்தில், 20 ஆயிரம்
 நல வாரிய பதிவு எளிமையாகுமா?

திருப்பூர்:ஏ.ஐ.டி.யு.சி., கட்டட தொழிலாளர் சங்க மாவட்ட கோரிக்கை மாநாடு, திருப்பூரில் நேற்று நடந்தது.கட்டட சங்க மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமைவகித்தார். ஏ.ஐ.டி.யு.சி., மாநில செயலாளர் சின்னசாமி, இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் ரவி உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.மாவட்டத்தில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டட தொழிலாளர் பணிபுரிந்து வருகின்றனர். ஆனால், அரசு நலவாரியத்தில், 20 ஆயிரம் பேர் மட்டுமே உறுப்பினராக பதிவு செய்துள்ளனர். தற்போது, ஆன்லைனில் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை நடக்கிறது.நலவாரிய உறுப்பினராக பதிவு செய்வதற்கு, ஆதாரில் இணைக்கப்பட்ட மொபைல் எண் கட்டாயம் என்பதால், தொழிலாளர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. உறுப்பினர் சேர்க்கைக்கான பதிவு முறைகளை எளிமைப்படுத்த வேண்டும்.இடம்பெயர்ந்த தொழிலாளர்கள், சொந்த ஊரில் ரேஷன் கார்டு பெற்றுள்ளனர்; அவர்களால், திருப்பூரில் பதிவு செய்யமுடிவதில்லை. தொழிற்சங்கங்களும், வி.ஏ.ஓ., வழங்கும் சான்று அடிப்படையில், வெளியூர் தொழிலாளர் நலவாரிய உறுப்பினராக பதிவு செய்யும் வகையில் மாற்றம் கொண்டுவரவேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X