பொது செய்தி

தமிழ்நாடு

பசுமை பயணம் தொடர்கிறது!

Added : ஆக 09, 2021
Share
Advertisement
திருப்பூர்:வனத்துக்குள் திருப்பூர் - 7' திட்டத்தின் கீழ் தாராபுரத்தில், 2,180 மரக்கன்று நேற்று நடப்பட்டது.'வனத்துக்குள் திருப்பூர் - 7' திட்டத்தின் கீழ் மரம் வளர்ப்பில் ஆர்வமுடையவரின் தோட்டங்களுக்கு சென்று மரக்கன்று நட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் பசுமை பரப்பாக மாறி வருகிறது. அவ்வகையில், தாராபுரம், தளவாய்ப்பட்டணம், தண்ணீர் பந்தலில் நேற்று
 பசுமை பயணம் தொடர்கிறது!

திருப்பூர்:வனத்துக்குள் திருப்பூர் - 7' திட்டத்தின் கீழ் தாராபுரத்தில், 2,180 மரக்கன்று நேற்று நடப்பட்டது.'வனத்துக்குள் திருப்பூர் - 7' திட்டத்தின் கீழ் மரம் வளர்ப்பில் ஆர்வமுடையவரின் தோட்டங்களுக்கு சென்று மரக்கன்று நட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் பசுமை பரப்பாக மாறி வருகிறது. அவ்வகையில், தாராபுரம், தளவாய்ப்பட்டணம், தண்ணீர் பந்தலில் நேற்று மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.தோட்ட உரிமையாளர்கள் ரவிக்குமார், ரத்தினம், வள்ளியம்மை மற்றும் 'வனத்துக்குள் திருப்பூர்' திட்ட குழுவினர் பங்கேற்றனர். அகில், கல்அத்தி, புத்திரன் ஜீவா, நருவிழி, வேம்பு, நீர்மருது, பூவரசு, நாவல், சிசுமுருக்கன், அடம்பா, சந்தனம், செம்மரம், மகாகனி, ஈட்டி உள்ளிட்ட, 2,180 மரக்கன்றுகள் நடப்பட்டன.மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்ணில் 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டக்குழுவினரை தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X