சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் செய்தி: நிறுவன உரிமையாளர் பலி

Added : ஆக 09, 2021
Share
Advertisement
கருவம்பாளையம், தெற்கு தோட்டத்தை சேர்ந்தவர், முருகன், 61. கே.வி.ஆர்., நகரில் பனியன் நிறுவனம் நடத்தி வந்தார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம், கடன்தொல்லை காரணமாக துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடன் தொல்லையால் தான் இம்முடிவு எடுத்ததாக கடிதம் எழுதி வைத்துள்ளார். நல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.திருடனை பிடித்த மக்கள்திருப்பூர் வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் நடராஜ், 32.

கருவம்பாளையம், தெற்கு தோட்டத்தை சேர்ந்தவர், முருகன், 61. கே.வி.ஆர்., நகரில் பனியன் நிறுவனம் நடத்தி வந்தார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம், கடன்தொல்லை காரணமாக துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடன் தொல்லையால் தான் இம்முடிவு எடுத்ததாக கடிதம் எழுதி வைத்துள்ளார். நல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
திருடனை பிடித்த மக்கள்
திருப்பூர் வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் நடராஜ், 32. வேலைக்கு சென்று திரும்புகையில், சோர்வாக இருந்ததால், பழைய பஸ் ஸ்டாண்டில் சிறிது நேரம் அமர்ந்துள்ளார். அருகில் வந்த நபர், 350 ரூபாயை பறித்து கொண்டு ஓட முயன்றுள்ளார். நடராஜ் கூச்சலிட அருகில் இருந்தவர்கள், திருடனை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் மதுரையை சேர்ந்த சிவசாமி (30) என்பது தெரியவந்தது.

20 கிலோ கஞ்சா சிக்கியது; வாலிபர் கைது

ஒடிசா மாநிலம், ராதாபூர் பகுதியை சேர்ந்தவர் ஜெகபன்நாயக், 28. பல்லடம் அடுத்த சின்னியகவுண்டம்பாளையத்தில் வசிக்கிறார். இவர், வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.எஸ்.ஐ., விஜயகுமார் தலைமையிலான போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அதில், 6 பண்டல்கள் கொண்ட, 20 கிலோ கஞ்சா விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஒடிசாவில் இருந்து ரயில் மூலம் இவற்றை எடுத்து வந்ததை போலீசார் விசாரணையில் உறுதி செய்தனர். ஜெகபன்நாயக்கை கைது செய்து பல்லடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X