பொது செய்தி

தமிழ்நாடு

பூந்தமல்லி பைபாஸ் - கலங்கரை விளக்கம் மெட்ரோ ரயில் பாதை பணிகள் வேகம்

Added : ஆக 09, 2021
Share
Advertisement
சென்னை:பூந்தமல்லி பைபாஸ் - கலங்கரை விளக்கம் மெட்ரோ பாதை பணியை துரிதப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சென்னை மெட்ரோ ரயில் இரண்டாவது திட்டத்தில், 61 ஆயிரத்து, 843 கோடி ரூபாய் செலவில், மூன்று வழித்தடங்களில், 118.9 கி.மீ., மெட்ரோ பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதில், பூந்தமல்லி பைபாஸ் - கலங்கரை விளக்கம் இடையே, 26.01 கி.மீ., பாதை அமைக்க, ஆரம்ப கட்டப் பணிகள், நசரத்பேட்டை அருகே ஜூன், 6ம்

சென்னை:பூந்தமல்லி பைபாஸ் - கலங்கரை விளக்கம் மெட்ரோ பாதை பணியை துரிதப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாவது திட்டத்தில், 61 ஆயிரத்து, 843 கோடி ரூபாய் செலவில், மூன்று வழித்தடங்களில், 118.9 கி.மீ., மெட்ரோ பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதில், பூந்தமல்லி பைபாஸ் - கலங்கரை விளக்கம் இடையே, 26.01 கி.மீ., பாதை அமைக்க, ஆரம்ப கட்டப் பணிகள், நசரத்பேட்டை அருகே ஜூன், 6ம் தேதி துவங்கின. இப்பாதை, 16 கி.மீ., தரைக்கு மேலும், 10.1 கி.மீ., சுரங்கத்திலும் அமைகிறது.தரைக்கு மேல், 18 நிலையம், சுரங்கத்தில், 12 நிலையம் என மொத்தம், 30 நிலையங்கள் கட்டப்பட உள்ளன.
போரூர் ஜங்ஷன் - கலங்கரை விளக்கம் இடையே, மூன்று நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு, ஆரம்பக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இதில், போரூர் ஜங்ஷனில் இருந்து, கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் வரை, ஆற்காடு சாலையின் மீது துாண்கள் அமைக்கப்பட்டு, மெட்ரோ பாதை அமைக்கப்பட உள்ளது. திட்டமிடல்இதற்காக, ஆற்காடு சாலை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
சாலையில் தேவையான இடங்களில், தற்காலிக இரும்பு தடுப்பும் அமைக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, போரூர் ஜங்ஷனில் இருந்து கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் வரை, ஆற்காடு சாலையில் காலை, 8:00 மணியில் இருந்து, காலை, 11:00 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் திட்ட அதிகாரிகள், ஒப்பந்த நிறுவன உயரதிகாரிகள், போரூர் ஜங்ஷனில் இருந்து கோடம்பாக்கம் பவர்ஹவஸ் வரை சென்று பார்வையிட்டனர். வரும், 16ம் தேதியில் இருந்து, பணிகளை துரிதப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X