சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காலில் விழுந்த உதவியாளர்: விவசாயி மீது வழக்கு

Added : ஆக 09, 2021
Share
Advertisement
அன்னுார்:காலில் விழுந்து அரசு ஊழியர் மன்னிப்பு கேட்ட விவகாரத்தில், விவசாயி மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதியப்பட்டது.கோவை மாவட்டம், அன்னுார் அருகே ஒட்டர்பாளையம், வி.ஏ.ஓ., அலுவலகத்துக்கு, கடந்த 6ம் தேதி விவசாயி கோபால்சாமி, பட்டா மாறுதல் தொடர்பாக விசாரிக்க சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்த வி.ஏ.ஓ., கலைச்செல்வி, உதவியாளர் முத்துசாமி ஆகியோருடன் வாக்குவாதம்

அன்னுார்:காலில் விழுந்து அரசு ஊழியர் மன்னிப்பு கேட்ட விவகாரத்தில், விவசாயி மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதியப்பட்டது.

கோவை மாவட்டம், அன்னுார் அருகே ஒட்டர்பாளையம், வி.ஏ.ஓ., அலுவலகத்துக்கு, கடந்த 6ம் தேதி விவசாயி கோபால்சாமி, பட்டா மாறுதல் தொடர்பாக விசாரிக்க சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்த வி.ஏ.ஓ., கலைச்செல்வி, உதவியாளர் முத்துசாமி ஆகியோருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது விவசாயி கோபால்சாமி காலில் விழுந்து, முத்துசாமி கதறும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இது குறித்து விசாரிக்க, மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் தலைமையில், கலெக்டர் சமீரன் குழு அமைத்தார். குழு விசாரித்து கலெக்டரிடம் அறிக்கை சமர்ப்பித்தது.இதையடுத்து, கிராம உதவியாளர் முத்துசாமி கொடுத்த புகாரின்படி, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது, கொலை மிரட்டல் விடுத்தது, வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.நேற்றும் கோவை வடக்கு ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன், அன்னுார் தாசில்தார் ரத்தினம், மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி., ஜெய்சிங் ஆகியோர் வி.ஏ.ஓ., மற்றும் உதவியாளரிடம் விசாரணை நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X