விளையாட்டு விபரீதம்: காஞ்சியில் சிறுவன் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விளையாட்டு விபரீதம்: காஞ்சியில் சிறுவன் பலி

Added : ஆக 09, 2021
Share
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், வீட்டில் கட்டப்பட்டிருந்த கயிற்றில் தொங்கி விளையாடிய சிறுவன், கழுத்து இறுகி உயிரிழந்தான்.காஞ்சிபுரம், பிள்ளையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் உமருதீன் மகன் அமித் பாட்ஷா, 11. இவர்கள் வீட்டில் பெரியவர்கள் உட்கார்ந்து எழுந்திருக்க வசதியாக, கயிறுடன் ஒரு டவல் கட்டி தொங்க விட்டிருந்தனர். சம்பவத்தன்று இரவு சிறுவன் அமித் பாட்ஷா, அந்த கயிற்றை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், வீட்டில் கட்டப்பட்டிருந்த கயிற்றில் தொங்கி விளையாடிய சிறுவன், கழுத்து இறுகி உயிரிழந்தான்.
காஞ்சிபுரம், பிள்ளையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் உமருதீன் மகன் அமித் பாட்ஷா, 11. இவர்கள் வீட்டில் பெரியவர்கள் உட்கார்ந்து எழுந்திருக்க வசதியாக, கயிறுடன் ஒரு டவல் கட்டி தொங்க விட்டிருந்தனர். சம்பவத்தன்று இரவு சிறுவன் அமித் பாட்ஷா, அந்த கயிற்றை பிடித்து விளையாடிக் கொண்டிருந்தான்.
வீட்டில் உள்ளவர்கள் வெளி அறையில் இருந்தனர். நீண்ட நேரமாக மகனின் சத்தம் கேட்காததால், பெற்றோர் உள்ளே சென்று பார்த்தனர்.அப்போது, கழுத்தில் டவல் இறுகி, தொங்கிய நிலையில் சிறுவன் மூச்சற்று காணப்பட்டான்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சிறுவனை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சிறுவன் ஏற்கனவே இறந்ததை டாக்டர்கள் உறுதி செய்தனர். இதுகுறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X