பார் நடத்துவோர் உற்சாகம்: பொதுமக்கள் திண்டாட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'பார்' நடத்துவோர் உற்சாகம்: பொதுமக்கள் திண்டாட்டம்

Added : ஆக 09, 2021
Share
செங்குன்றம்: ஓரிரு மாதங்களில், 'பார்' ஒப்பந்தம் முடிந்து, அவை தி.மு.க.,வினர் கைகளுக்கு மாறும் என்ற எதிர்பார்ப்பால், ஊரடங்கு விதியை மீறி பார் நடத்துவோர் மூலம், சரக்கு விற்பனை தாராளமாகி உள்ளது.சென்னையில், செங்குன்றம், புழல், மாதவரம், கொரட்டூர், அம்பத்துார், ஆவடி சுற்றுவட்டாரங்களில், மதுபான 'பார்' நடத்துவோர் மூலம், கள்ளச் சந்தைகளில் சரக்கு விற்பனை கொடிகட்டிப்

செங்குன்றம்: ஓரிரு மாதங்களில், 'பார்' ஒப்பந்தம் முடிந்து, அவை தி.மு.க.,வினர் கைகளுக்கு மாறும் என்ற எதிர்பார்ப்பால், ஊரடங்கு விதியை மீறி பார் நடத்துவோர் மூலம், சரக்கு விற்பனை தாராளமாகி உள்ளது.
சென்னையில், செங்குன்றம், புழல், மாதவரம், கொரட்டூர், அம்பத்துார், ஆவடி சுற்றுவட்டாரங்களில், மதுபான 'பார்' நடத்துவோர் மூலம், கள்ளச் சந்தைகளில் சரக்கு விற்பனை கொடிகட்டிப் பறக்கிறது.
இதனால் தெருக்கள், சாலை, பூங்கா, பள்ளி வளாகம், ஏரிக்கரை ஆகியவற்றை, 'குடி'மகன்கள் திறந்தவெளி பார்களாக மாற்றி விட்டனர். குடிமகன்களின் அத்துமீறல், போதை தகராறு ஆகியவற்றால், பொதுமக்கள் நிம்மதி இழந்துள்ளனர். தடையின்றி கிடைக்கும் மதுவால் விபத்து, உயிரிழப்புகளும் தொடர்கின்றன. போலீசாரும் கண்டுகொள்வதில்லை.
ஆட்சி மாற்றத்தால், கடந்த 10 ஆண்டுகளாக பார் நடத்தியோரின் ஒப்பந்தம், அடுத்த ஓரிரு மாதங்களில் முடிகிறது. இதையடுத்து, பார்கள் தி.மு.க.,வினர் கைக்கு மாறும் என்ற எதிர்பார்ப்பால், புறநகரில் சரக்கு விற்பனை தாராளமாகி உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X