பொது செய்தி

தமிழ்நாடு

ஜவுளி ஏற்றுமதி வாரியம் அமைக்க எதிர்பார்ப்பு

Added : ஆக 09, 2021
Share
Advertisement
திருப்பூர்:தமிழகத்தில், ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம் அமைக்க வேண்டும் என்று ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக்கழகம் (ஏ.இ.பி.சி.,) கோரிக்கை விடுத்துள்ளது.தமிழக பட்ஜெட், வரும் 13ல் தாக்கலாகிறது. நிதியமைச்சர் தியாகராஜன் தலைமையில் சென்னையில் நடந்த, பட்ஜெட்டுக்கு முந்தைய கருத்துக்கேட்பு கூட்டத்தில், ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர் சங்க(ஏ.இ.பி.சி.,) தலைவர்

திருப்பூர்:தமிழகத்தில், ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம் அமைக்க வேண்டும் என்று ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக்கழகம் (ஏ.இ.பி.சி.,) கோரிக்கை விடுத்துள்ளது.தமிழக பட்ஜெட், வரும் 13ல் தாக்கலாகிறது. நிதியமைச்சர் தியாகராஜன் தலைமையில் சென்னையில் நடந்த, பட்ஜெட்டுக்கு முந்தைய கருத்துக்கேட்பு கூட்டத்தில், ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர் சங்க(ஏ.இ.பி.சி.,) தலைவர் சக்திவேல் சார்பில், சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை:ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதிக்காக, ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம் அமைக்கவேண்டும். திருப்பூர் மாவட்டத்துக்கு, வணிக வரி கோட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி.,அலுவலகத்தை ஏற்படுத்த வேண்டும்.ஜி.எஸ்.டி., தாமத கட்டணத்தை செலுத்த, முதல் ஐந்து ஆண்டுகளுக்கு விலக்கு அளிப்பதோடு, அதற்கான வட்டியை, ஆறு முதல் ஒன்பது சதவீதத்துக்குள் கொண்டு வர வேண்டும். ஆண், பெண் தொழிலாளருக்கு தனித்தனியே தங்கும் விடுதிகள், குடியிருப்பு வீடுகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கவேண்டும்.கோவை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த வேண்டும். மெட்ரோ ரயில் திட்டத்தை திருப்பூர் வரை நீட்டிக்கவேண்டும். தமிழக துறைமுகங்களுக்கு பெரிய கப்பல்கள் வந்து செல்ல வழிவகை செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X