பொது செய்தி

இந்தியா

அறங்காவலர் குழு தலைவராக மீண்டும் சுப்பா ரெட்டி நியமனம்

Added : ஆக 09, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
திருப்பதி,--திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக மீண்டும் சுப்பா ரெட்டியை நியமித்து ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக பொறுப்பு அறங்காவலர் குழுவிடம் உள்ளது. இந்த அறங்காவலர் குழுவை ஆந்திர அரசு இரண்டு ஆண்டு இடைவெளியில் புதிதாக நியமித்து வருகிறது. இதன்படி 2019ம் ஆண்டு சுப்பா ரெட்டி தலைமையில் 18 உறுப்பினர்கள் அடங்கிய
 அறங்காவலர் குழு தலைவராக மீண்டும் சுப்பா ரெட்டி நியமனம்

திருப்பதி,--திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக மீண்டும் சுப்பா ரெட்டியை நியமித்து ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக பொறுப்பு அறங்காவலர் குழுவிடம் உள்ளது. இந்த அறங்காவலர் குழுவை ஆந்திர அரசு இரண்டு ஆண்டு இடைவெளியில் புதிதாக நியமித்து வருகிறது. இதன்படி 2019ம் ஆண்டு சுப்பா ரெட்டி தலைமையில் 18 உறுப்பினர்கள் அடங்கிய அறங்காவலர் குழு தேவஸ்தான பொறுப்பை ஏற்றது.

இந்த குழுவின் பதவிக்காலம் சமீபத்தில் முடிவடைந்தது. புதிய குழு தேர்ந்தெடுக்க தாமதம் ஆகும் என்பதால் அதுவரை தேவஸ்தானத்தின் நிர்வாக பொறுப்பை ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவிடம் ஆந்திர அரசு ஒப்படைத்துள்ளது. இந்நிலையில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக மீண்டும் சுப்பா ரெட்டியை ஆந்திர அரசு நியமித்து நேற்று அரசாணை வெளியிட்டுஉள்ளது.

விரைவில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக சுப்பா ரெட்டி பொறுப்பேற்க உள்ளார். அறங்காவலர் குழு தலைவராக தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆந்திர அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபர் சுப்பா ரெட்டி. இவர் ஆந்திர முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டியின் சித்தப்பா என்பது குறிப்பிடத் தக்கது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
09-ஆக-202114:23:22 IST Report Abuse
vpurushothaman சோழியன் குடுமி சும்மா ஆடவில்லை. சுப்பா ரெட்டி சித்தப்பா சார். ஓம் நமோ நாராயணாய : ஓம் நமோ வேங்கடேசாய : சாதாரண ஜனங்களுக்கு விரைவு தரிசனம் ஏற்பாடு செய்யுங்கப்பா .
Rate this:
jagan - Chennai,இலங்கை
14-ஆக-202117:41:51 IST Report Abuse
jaganஅவரோ கிரிஸ்துவர் அவருக்கு எது முக்கியமோ அதை செய்வார்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X