பொது செய்தி

இந்தியா

'இட்லி, தோசை மாவுக்கு ஜி.எஸ்.டி., குறைக்கப்படாது'

Added : ஆக 09, 2021
Share
Advertisement
புதுடில்லி,-'சமைப்பதற்கு தயார் நிலையில் 'பவுடர்' வடிவில் விற்கப்படும் கஞ்சி, தோசை மற்றும் இட்லி மாவுகளுக்கான ஜி.எஸ்.டி., 18 சதவீதத்தில் இருந்து குறைக்கப்படாது' என, ஜி.எஸ்.டி., தீர்ப்பாயம் தெரிவித்து உள்ளது.'பிராண்ட்'சமைப்பதற்கு தயார் நிலையில் இட்லி, தோசை மற்றும் கஞ்சி உள்ளிட்ட பல்வேறு உணவு பொருட்கள் பவுடர் வடிவில் விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட

புதுடில்லி,-'சமைப்பதற்கு தயார் நிலையில் 'பவுடர்' வடிவில் விற்கப்படும் கஞ்சி, தோசை மற்றும் இட்லி மாவுகளுக்கான ஜி.எஸ்.டி., 18 சதவீதத்தில் இருந்து குறைக்கப்படாது' என, ஜி.எஸ்.டி., தீர்ப்பாயம் தெரிவித்து உள்ளது.'பிராண்ட்'சமைப்பதற்கு தயார் நிலையில் இட்லி, தோசை மற்றும் கஞ்சி உள்ளிட்ட பல்வேறு உணவு பொருட்கள் பவுடர் வடிவில் விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட 'பிராண்ட்' பெயரில் பவுடர் வடிவில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களுக்கு, 18 சதவீதம் ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்படுகிறது.5 சதவீதம்அதுவே இட்லி மற்றும் தோசை மாவை பவுடராக இல்லாமல், மாவாகவே விற்பனை செய்யும் பொருட்களுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி., விதிக்கப்படுகிறது.இதை எதிர்த்து 'கிருஷ்ணா பவன் புட்ஸ் அண்ட் ஸ்வீட்ஸ்' என்ற நிறுவனம் தமிழகத்திற்கான ஜி.எஸ்.டி., தீர்ப்பாயத்தில் முறையீடு செய்தது.இதை விசாரித்த தீர்ப்பாயம் 'மாவாக அல்லாமல் பவுடராக விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களுக்கு 18 சதவீதம் என்ற ஜி.எஸ்.டி., வரம்பு குறைக்கப்படாது' என, திட்டவட்டமாக தெரிவித்தது.'உணவு பொருட்களுக்கான வரியில் இது போன்ற வேறுபாடுகள் பல்வேறு குழப்பங்களுக்கு வழிவகுக்கும்' என, உணவு பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X