ஐ.டி.பி.பி.,யில் முதல் முறையாக 2 பெண் அதிகாரிகள் நியமனம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஐ.டி.பி.பி.,யில் முதல் முறையாக 2 பெண் அதிகாரிகள் நியமனம்

Added : ஆக 09, 2021
Share
முசோரி,-ஐ.டி.பி.பி., எனப்படும் இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படையில் முதல் முறையாக இரண்டு பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். துணை ராணுவப் படையான ஐ.டி.பி.பி., இந்திய - சீனா எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கும் உத்தரகண்டின் முசோரியில் ஐ.டி.பி.பி., அதிகாரிகள் பயிற்சி மையம் உள்ளது.இந்த மையத்தில்

முசோரி,-ஐ.டி.பி.பி., எனப்படும் இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படையில் முதல் முறையாக இரண்டு பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

துணை ராணுவப் படையான ஐ.டி.பி.பி., இந்திய - சீனா எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கும் உத்தரகண்டின் முசோரியில் ஐ.டி.பி.பி., அதிகாரிகள் பயிற்சி மையம் உள்ளது.இந்த மையத்தில் வெற்றிகரமாக பயிற்சி முடிந்த 53 அதிகாரிகளுக்கான பயிற்சி நிறைவு விழா நேற்று நடந்தது.

இதில் இரண்டு பெண் அதிகாரிகளும் இடம் பெற்றிருந்தனர். முதல்வர் தாமி, அதிகாரிகளின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பெண் அதிகாரிகளான பிரக்ருதி, தீக் ஷா ஆகியோர் உதவி கமாண்டர்களாக ஐ.டி.பி.பி.,யில் நியமிக்கப்பட்டனர். இந்த படைப் பிரிவில் பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுஉள்ளது இதுவே முதல் முறை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X