பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் கடைகளை திறக்க வியாபாரிகள் ரெடி!

Added : ஆக 09, 2021
Share
Advertisement
சென்னை: சென்னையில், மக்கள் அதிகம் கூடும் ஒன்பது இடங்களில், மாநகராட்சி விதித்த தடை இன்றுடன் முடிவடைக்கிறது.இதையடுத்து, அப்பகுதிகளில் உள்ள கடைகளை மீண்டும் திறக்க வியாபாரிகள் தயாராகி உள்ளனர்.சென்னையில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமெடுத்ததை அடுத்து, மாநகராட்சிக்கு உட்பட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்கள் கண்டறியப்பட்டன.அதன் படி, தி.நகர், ரங்கநாதன் தெரு சந்திப்பு,

சென்னை: சென்னையில், மக்கள் அதிகம் கூடும் ஒன்பது இடங்களில், மாநகராட்சி விதித்த தடை இன்றுடன் முடிவடைக்கிறது.இதையடுத்து, அப்பகுதிகளில் உள்ள கடைகளை மீண்டும் திறக்க வியாபாரிகள் தயாராகி உள்ளனர்.
சென்னையில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமெடுத்ததை அடுத்து, மாநகராட்சிக்கு உட்பட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்கள் கண்டறியப்பட்டன.அதன் படி, தி.நகர், ரங்கநாதன் தெரு சந்திப்பு, வடக்கு உஸ்மான் சாலை முதல் மாம்பலம் ரயில் நிலையம் வரை; புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு, புருக்லின் சாலை வரை.ஜாம்பஜார் பாரதி சாலை, ரத்னா கபே சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை; பக்கிசாஹிப் தெரு, அபிபுல்லா தெரு, புலிபோன் பஜார், என்.எஸ்.சி., போஸ் சாலை, குறளகம் முதல் தங்கச்சாலை சந்திப்பு வரை.
மேலும், ராயபுரம் மார்க்கெட் பகுதியில் கல்மண்டபம் சாலை, வாட்டர் டேங்க் முதல், காமாட்சியம்மன் கோவில் வரை.அமைந்தகரை மார்க்கெட் பகுதி பூந்தமல்லி நெடுஞ்சாலை, அமைந்தகரை காவல் உதவி மையம் முதல் புல்லா அவென்யூ, திரு.வி.க., நகர் பூங்கா சந்திப்பு வரை; செங்குன்றம் மார்க்கெட் பகுதி, ஆஞ்சநேயர் சிலை முதல் அம்பேத்கர் சிலை வரை.மேற்கண்ட பகுதிகளில் இயங்கும் வணிக வளாகங்கள் மற்றும் அனைத்து அங்காடிகள், ஜூலை 31ம் தேதி முதல் இன்று காலை 6:00 மணி வரை செயல்பட மாநகராட்சி தடை விதித்தது.
மேலும், கொத்தவால்சாவடி மார்க்கெட், 31ம் தேதி முதல் இன்று காலை, 6:00 மணி வரை செயல்பட தடை விதித்தது. இன்றுடன் தடை நிறைவு பெறுவதையடுத்து, வழக்கம் போல் கடைகளை திறக்க வியாபாரிகள் தயாராகி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X