பொது செய்தி

இந்தியா

ஆதார் எண் இணைப்பு: இ.பி.எப்., எச்சரிக்கை

Updated : ஆக 09, 2021 | Added : ஆக 09, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: இ.பி.எப்., கணக்கு எண்ணுடன் ஆதாரை இணைக்க செப்., 1ம் தேதி கடைசி நாள் என்றும், ஆதாரை இணைக்காத சந்தாதாரர்கள் பணம் செலுத்தவோ, எடுக்கவோ, சலுகை பெறவோ முடியாது என்றும் இ.பி.எப்., எனப்படும் வருங்கால வைப்பு நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.வருங்கால வைப்பு நிதி திட்ட சந்தாதாரர்கள், தங்களின் யு.ஏ.என்., எனப்படும் ஒருங்கிணைந்த கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க, ஜூன் 1ம்

புதுடில்லி: இ.பி.எப்., கணக்கு எண்ணுடன் ஆதாரை இணைக்க செப்., 1ம் தேதி கடைசி நாள் என்றும், ஆதாரை இணைக்காத சந்தாதாரர்கள் பணம் செலுத்தவோ, எடுக்கவோ, சலுகை பெறவோ முடியாது என்றும் இ.பி.எப்., எனப்படும் வருங்கால வைப்பு நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.



latest tamil news



வருங்கால வைப்பு நிதி திட்ட சந்தாதாரர்கள், தங்களின் யு.ஏ.என்., எனப்படும் ஒருங்கிணைந்த கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க, ஜூன் 1ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது.இந்த அவகாசம், கொரோனா தொற்று பரவல் காரணமாக செப்., 1 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இ.பி.எப்., கணக்கு எண்ணுடன் ஆதார் எண் இணைக்காத சந்தாதாரர்களின் கணக்குக்கு, அவர்களது நிறுவனத்திடம் இருந்து சந்தா தொகை வசூலிக்கப்பட மாட்டாது.


latest tamil news


மேலும் சந்தாதாரர்களும் தங்களது கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.ஆதார் எண்ணை இணைக்கும்படி நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் இ.பி.எப்., வலியுறுத்தி உள்ளது. இணையதளம் வாயிலாகவோ அல்லது இ.பி.எப்., அலுவலகத்திலோ ஆதார் எண்ணை இணைக்கலாம்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
09-ஆக-202120:06:18 IST Report Abuse
Loganathan Kuttuva அரசு இறப்பு சான்றிதழ் வழங்கும் பொழுது அதை ஆதார் மற்றும் பான் என்னுடன் இணைக்க வேண்டும் .
Rate this:
Cancel
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
09-ஆக-202106:55:35 IST Report Abuse
தமிழ்ச்செல்வன் எதனுடனும் ஆதாரை இணைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் மோடியினுடையது
Rate this:
Cancel
09-ஆக-202104:46:34 IST Report Abuse
அப்புசாமீ சாதாரணமாக அலுவலகங்களில் செயல்படுத்த வேண்டியதை இப்பிடி எச்சரிக்கை அது இதுன்னு பயமுறுத்துறாங்க..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X