அம்மா உணவக பெண் ஊழியர்கள் பல்லாவரத்தில் திடீர் போராட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'அம்மா' உணவக பெண் ஊழியர்கள் பல்லாவரத்தில் திடீர் போராட்டம்

Added : ஆக 09, 2021
Share
பல்லாவரம்: பல்லாவரத்தில், 'அம்மா' உணவகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்கள், தங்களை பணி நீக்கம் செய்ய முயற்சி நடப்பதாகக் கூறி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.பல்லாவரம் நகராட்சியில், பல்லாவரம், கீழ்க்கட்டளை பேருந்து நிலையங்களை ஒட்டி, அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றன.பரபரப்புஒவ்வொரு உணவகத்திலும், மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த, தலா 12 பெண்கள் பணிபுரிந்து

பல்லாவரம்: பல்லாவரத்தில், 'அம்மா' உணவகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்கள், தங்களை பணி நீக்கம் செய்ய முயற்சி நடப்பதாகக் கூறி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்லாவரம் நகராட்சியில், பல்லாவரம், கீழ்க்கட்டளை பேருந்து நிலையங்களை ஒட்டி, அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றன.பரபரப்புஒவ்வொரு உணவகத்திலும், மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த, தலா 12 பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், பல்லாவரம் பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள அம்மா உணவகத்திற்கு, சில பெண்கள் வந்தனர். தாங்கள் பயிற்சி பெற வந்துள்ளதாக கூறினர். இதனால் அங்கு பணிபுரிந்து வரும் பெண்கள் அதிர்ச்சிஅடைந்தனர். தாங்கள், ஏழு ஆண்டுகளாக பணிபுரிந்து வருவதாகவும், தங்களை பணியில் இருந்து நீக்கவே இப்படி செய்வதாகக் கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின், சமையல் செய்வதை நிறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, பயிற்சி பெறுவதாகக் கூறி வந்த பெண்கள், திரும்பி சென்றனர்.


'நோட்டீஸ்'

இதுகுறித்து, நகராட்சி கமிஷனர் காந்திராஜ் கூறியதாவது:
அம்மா உணவகத்தை முறையாக பராமரிப்பதில்லை. இருப்பு விஷயத்தில், தவறான தகவல்கள் தெரிவிக்கின்றனர். உணவுகளை மாற்றி மாற்றி சமைக்கின்றனர்.ஆய்வின் போது, இந்த தவறு தெரிய வந்ததால், முறையாக பராமரிக்க வேண்டும் என, 'நோட்டீஸ்' வழங்கினோம்.
அதன் பின்னும் சரியாகவில்லை. அதனால், இரண்டாவது முறையாக நோட்டீஸ் வழங்கியுள்ளோம். அப்போதும், தவறுகளை திருத்தவில்லை எனில், புதிய ஊழியர்களை நியமிப்பது தவிர வேறு வழியில்லை. இவ்வாறு, நகராட்சி கமிஷனர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X