இது உங்கள் இடம்: சுட்டுப் போட்டாலும் வராது!

Updated : ஆக 09, 2021 | Added : ஆக 09, 2021 | கருத்துகள் (54) | |
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :வெ.ச.பாகீரதி, சேலத்திலிருந்து எழுதுகிறார்:தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, ஒரு பேட்டியில், 'காங்., ஆட்சி காலத்தில் தானே, 'நீட்' தேர்வு கொண்டு வரப்பட்டது' என்ற கேள்விக்கு, '2014 வரை தமிழகத்தில் நீட் தேர்வு கிடையாது' என, மிக சாதுர்யமாக பதிலளித்துள்ளார்.நாடு முழுமைக்கான ஒரு


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :வெ.ச.பாகீரதி, சேலத்திலிருந்து எழுதுகிறார்:

தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, ஒரு பேட்டியில், 'காங்., ஆட்சி காலத்தில் தானே, 'நீட்' தேர்வு கொண்டு வரப்பட்டது' என்ற கேள்விக்கு, '2014 வரை தமிழகத்தில் நீட் தேர்வு கிடையாது' என, மிக சாதுர்யமாக பதிலளித்துள்ளார்.latest tamil news


நாடு முழுமைக்கான ஒரு கேள்விக்கு, 'கழுவுகிற மீனில் நழுவுகிற மீன்' போல அவர் அளித்த பதில் நகைப்புக்குரியது.மேலும், 'தமிழகத்தில் பா.ஜ., யாருக்கும் போட்டியல்ல. 2021 தேர்தலில் காங்., 20 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், பா.ஜ., நான்கு இடங்களில் மட்டுமே வென்றது' எனக் கூறி புளகாங்கிதம் அடைந்துள்ளார்; வாஸ்தவம் தான்!இரண்டு கட்சிகளும் தனித்து நின்று ஜெயித்தது போல கூறுகிறார். உண்மையில் அவர்களுக்கு கிடைத்த வெற்றி என்பது, திராவிட கட்சிகள் கொடுத்தது. அதில் என்ன பெருமை?பா.ஜ., இதுவரை தமிழகத்தை ஆண்டதில்லை. ஆனால், 20 ஆண்டு காலம் தமிழகத்தை ஆண்ட காங்கிரசின் இன்றைய நிலை பரிதாபமாக அல்லவா உள்ளது.


latest tamil news


தமிழக காங்கிரஸ் என்பது தி.மு.க.,வின் கிளைக்கழகம்; அவ்வளவு தான்!'ஈயத்தை பார்த்து இளித்ததாம் பித்தளை' என்பது போல உள்ளது அழகிரியின் பேச்சு.ஆனால் ஒன்று... 'குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை' என்பது போல, காங்., தலைவரின் இந்த சமாளிப்பு வித்தைகள் எல்லாம், பா.ஜ.,வினருக்கு சுட்டு போட்டாலும் வராது.

Advertisement
வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
subbu - Chennai,இந்தியா
09-ஆக-202120:36:12 IST Report Abuse
subbu சரிப்பா அழகிரி காங்கிரஸ் மேல அவ்வளவு நம்பிக்கை இருந்தால் தனித்து போட்டியிட்டு ஜெயிக்க வேண்டியதுதானே. எதுக்காக தீ மு க மீது சவாரி செய்யிறீங்க. புலி வால் விட்டால் அது கடிச்சிடும் இல்லையா
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
09-ஆக-202116:51:09 IST Report Abuse
Rajas /////காங்., தலைவரின் இந்த சமாளிப்பு வித்தைகள் எல்லாம், பா.ஜ.,வினருக்கு சுட்டு போட்டாலும் வராது.///// அரசின் எந்த ஒரு நடவடிக்கையும் தோல்வியில் முடியும் வேறு விவகாரங்களை திட்டம் போட்டு கிளறி மக்களை திசை திரும்புவதில் பிஜேபி தலைவர்கள் வல்லவர்கள். பண மதிப்பு இழப்பு செய்தது சரியல்ல என்ற புகார் வந்த போது பணம் அச்சடிக்கும் மிஷினை காங்கிரஸ் அரசு விற்றதாக புரளி கிளப்பினார்கள். பணம் அச்சடிக்கும் வேலை RBI கண்ட்ரோலில் உள்ளது. அங்கே யூனியன் உள்ளது. அதை போல அப்போதைய காங்கிரஸ் அரசு செய்திருந்தால் அங்கே இருந்த பிஜேபியின் யூனியன் என்ன செய்து கொண்டிருந்தது. இதை வெளியிடுவார்களா
Rate this:
09-ஆக-202122:18:25 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம்ஐயா அறிவாளியே aar.bi.ai. எடுக்கும் நடவடிக்கைகளை யூனியன்கள் ஒன்றும் செய்ய முடியாது ஆர் பி ஐ என்ன முப்பது தொழிலாளர்கள் வேலை செய்யும் உமி / தவிடு பிரிக்கும் சிறிய பாக்டரி என்று நினைத்தீரோ ?...
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
09-ஆக-202116:42:29 IST Report Abuse
Rajas /////காங்., தலைவரின் இந்த சமாளிப்பு வித்தைகள் எல்லாம், பா.ஜ.,வினருக்கு சுட்டு போட்டாலும் வராது.////ஏன் வராது. அதை விட அதிகமாக வரும். 16 மார்ச் 2020 அன்று பார்லிமென்டில் ராகுல் பேங்கில் அதிகமாக கடன் பெற்ற 50 பேர் யார் யார். அவர்களின் விவரங்களை வெளியிட வேண்டும் என்று சொன்ன போது நிர்மலா சீதாராமன் அதற்க்கு பதில் அளித்தார். அந்த கேள்விக்கு பதில் சொல்லாமல் write-off Waive-off" என்ன என்று விளக்கம் சொல்லி முடித்தார்களே அந்த சாமர்த்தியம் யாருக்கும் வரும். கடைசி வரை ராகுல் கேட்ட அந்த 50 பேர் லிஸ்டை அரசு தரப்பில் சொல்லவேயில்லையே.
Rate this:
Mithran.C - Nagerkovil,இந்தியா
09-ஆக-202117:33:19 IST Report Abuse
Mithran.Cஏன் குற்றம் சாட்டிய பப்புவுக்கு அந்த பெயர்களை சொல்ல வேண்டியது தானே?...
Rate this:
Rajas - chennai,இந்தியா
09-ஆக-202121:16:46 IST Report Abuse
Rajasகாங்கிரஸ் தலைவர்கள் ஏற்க்கனவே RTI வழியாக அந்த 50 பேர்களை பெற்று விட்டார்கள். அந்த RTI விவரங்களை வைத்தே ராகுல் பேசினார். ஆனாலும் அரசு அந்த 50 பேர்களை பார்லிமென்டில் சொல்லவில்லை. விஷயம் வெளிப்பட்டதால் வேறு வழியில்லாமல் 4 நாட்கள் கழித்து RBI வழியாக அந்த பெயர்களை அறிவித்தார்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X