பொது செய்தி

தமிழ்நாடு

'எல்லையோர மாவட்டங்களில் 100 சதவீதம் தடுப்பூசி'

Added : ஆக 09, 2021
Share
Advertisement
சென்னை: 'தமிழக எல்லையோர மாவட்டங்களில், 100 சதவீதம் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும், 'டெங்கு, சிக்குன் குனியா, ஸிகா' வைரஸ்களைப் பரப்பும் கொசுக்களை ஒழிக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் வேண்டும்' என, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், மக்கள் நல்வாழ்வுத் துறை

சென்னை: 'தமிழக எல்லையோர மாவட்டங்களில், 100 சதவீதம் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும், 'டெங்கு, சிக்குன் குனியா, ஸிகா' வைரஸ்களைப் பரப்பும் கொசுக்களை ஒழிக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் வேண்டும்' என, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:
தமிழகத்தில் கோவை, சென்னை, ஈரோடு, திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட 19 மாவட்டங்களில், கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தை ஒப்பிடும்போது, இந்த வாரத்தில் பாதிப்பு விகிதம் உயர்ந்துள்ளது. எனவே, நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.அதுமட்டுமின்றி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு, தினமும் தொழில் நிமித்தமாக தமிழகத்திலிருந்து பலர் சென்று வருகின்றனர்.
எனவே, எல்லையோர மாவட்டங்களில், 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மற்றொரு புறம், சிக்குன் குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள், அண்மைக் காலமாக கணிசமாக பதிவாகி வருகின்றன.கேரளா, மஹாராஷ்டிராவில் ஸிகா வைரஸ் பாதிப்பு இருப்பதால், அதுவும் எளிதில் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, கொசுக்களை ஒழிக்கவும், கொசு உற்பத்தியைத் தடுக்கவும் தக்க நடவடிக்கை எடுத்தல் அவசியம். இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X