பொது செய்தி

தமிழ்நாடு

செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலை விவாக்கம்: கட்டடங்களை அகற்றும் பணி துவக்கம்

Added : ஆக 09, 2021
Share
Advertisement
வாலாஜாபாத்: செங்கல்பட்டு - காஞ்சிபுரம் இடையே, சாலை விரிவாக்க பணிக்கு, அளவீடு செய்த கட்டடங்களை அகற்றும் பணியை, அந்தந்த குடியிருப்புவாசிகளே துவக்கி உள்ளனர்.சதுரங்கப்பட்டினம் - திருத்தணி வரை 105 கி.மீ., நீளமுடைய, இருவழி சாலை உள்ளது. இச்சாலையில், வாகனங்களின் பயன்பாடு அதிகமாக இருப்பதால், நான்குவழி சாலையாக விரிவுபடுத்தும் பணியில், நெடுஞ்சாலை துறை ஈடுபட்டுள்ளது.முதற்கட்டமாக,

வாலாஜாபாத்: செங்கல்பட்டு - காஞ்சிபுரம் இடையே, சாலை விரிவாக்க பணிக்கு, அளவீடு செய்த கட்டடங்களை அகற்றும் பணியை, அந்தந்த குடியிருப்புவாசிகளே துவக்கி உள்ளனர்.
சதுரங்கப்பட்டினம் - திருத்தணி வரை 105 கி.மீ., நீளமுடைய, இருவழி சாலை உள்ளது. இச்சாலையில், வாகனங்களின் பயன்பாடு அதிகமாக இருப்பதால், நான்குவழி சாலையாக விரிவுபடுத்தும் பணியில், நெடுஞ்சாலை துறை ஈடுபட்டுள்ளது.முதற்கட்டமாக, சதுரங்கப்பட்டினம் - செங்கல்பட்டு வரை, சாலை விரிவு படுத்தப்பட்டுள்ளது. இப்பணி, 2015ல் துவங்கி 2018ல் முடிந்தது.
இதையடுத்து, 2018ல், இரண்டாம் கட்டமாக, செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - திருத்தணி வரை விரிவாக்கம் செய்ய, நிலம் அளவீடு செய்யப்பட்டு உள்ளது. சாலை விரிவிற்கு, கையகப்படுத்திய நிலங்களில், அகற்றவிருக்கும் மரங்களுக்கு, இழப்பீடு வழங்குவதற்கு தோட்டக்கலை மற்றும் வேளாண் துறையினர் கணக்கெடுத்துள்ளனர்.அந்த வரிசையில், நெடுஞ்சாலை துறை கணக்கில் இருக்கும் மரங்களை அகற்றுவதற்கு, அத்துறையினர், 2019ல் கணக்கெடுத்து வரிசை எண்களை எழுதினர்.
கடந்த ஏப்ரல் மாதம், காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையோரம் இருக்கும் புளிய மரங்களை அகற்றினர். அந்த இடங்களில் வாகன விபத்து ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், நெடுஞ்சாலை துறையினர் எச்சரிக்கை தடுப்பு அமைத்தனர். இதையடுத்து, காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில், குதிரைக்கால்மடுவு, கம்பன் கால்வாய், புதுப்பாக்கம், கோவிந்தவாடி ஆகிய பகுதிகளில் உயர் மட்ட பாலம் கட்டுவதற்கு, தரைப்பாலங்களின் அருகே மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உள்ளது.
சமீபத்தில், செங்கல்பட்டு- காஞ்சிபுரம் சாலையில் இருக்கும், கருக்குப்பேட்டை, திம்மராஜம்பேட்டை, கீழ்ஒட்டிவாக்கம் உள்ளிட்ட பல கிராமங்களில், சாலை விரிவுபடுத்துவதற்கு அடையாளப்படுத்தப்பட்ட கட்டடங்களை, அந்தந்த குடியிருப்புவாசிகளே கூலி ஆட்கள் மூலமாக அகற்றும் பணியை துவக்கி உள்ளனர். சாலை விரிவாக்கத்திற்கு அகற்றப்படாத கட்டடங்களை நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றிவிட்டு, சம்பந்தப்பட்ட கட்டட உரிமையாளர்களிடம் பணம் வசூலிக்க உள்ளதாக துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X