பொது செய்தி

தமிழ்நாடு

தங்க பத்திரம் திட்டம்: பொது மக்கள் சேர வாய்ப்பு

Added : ஆக 09, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம்: ‛‛தங்க பத்திர திட்டத்தில், பொது மக்கள் சேர்ந்து பயன் பெறலாம்,'' என, காஞ்சிபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முரளி கூறினார்.இது குறித்து அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முரளி கூறியதாவது:தங்கப்பத்திரம் வெளியீட்டு திட்டம், இன்று முதல் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதை, காஞ்சிபுரம் அஞ்சல் கோட்டத்தின் கீழ் இயங்கும், அனைத்து தபால் நிலையங்களில், பொது மக்கள்

காஞ்சிபுரம்: ‛‛தங்க பத்திர திட்டத்தில், பொது மக்கள் சேர்ந்து பயன் பெறலாம்,'' என, காஞ்சிபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முரளி கூறினார்.
இது குறித்து அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முரளி கூறியதாவது:
தங்கப்பத்திரம் வெளியீட்டு திட்டம், இன்று முதல் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதை, காஞ்சிபுரம் அஞ்சல் கோட்டத்தின் கீழ் இயங்கும், அனைத்து தபால் நிலையங்களில், பொது மக்கள் சேர்ந்து பயன் பெறலாம்.ஒரு கிராம் தங்கம், 4,790 ரூபாய்க்கு அரசு நிர்ணயம் செய்துள்ளது.
இந்த தங்க பத்திரத் திட்டத்தில் சேர விரும்புவோர், அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், காஞ்சிபுரம் என்கிற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். மேலும், விபரங்களுக்கு, 044- - 27222901 என்கிற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X