பொது செய்தி

தமிழ்நாடு

மீனவர் நிலத்திற்கு பட்டா வழங்க வலியுறுத்தல்

Added : ஆக 09, 2021
Share
Advertisement
மாமல்லபுரம்: வாயலுார் உய்யாலி குப்பம் மீனவருக்கு அரசு வழங்கிய இலவச நிலத்திற்கு, வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்துகின்றனர்.செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த வாயலுார் - உய்யாலிகுப்பம் மீனவர் பகுதியில், 20 ஆண்டுகளுக்கு முன் கடலரிப்பில் மீனவர்கள் வீடுகள் இழந்தனர். இதையடுத்து, பிற்படுத்தப்பட்டோர் நல துறை, புதுப்பட்டினம் பகுதியில், தனியாரிடம் வாங்கிய நிலம்,

மாமல்லபுரம்: வாயலுார் உய்யாலி குப்பம் மீனவருக்கு அரசு வழங்கிய இலவச நிலத்திற்கு, வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்துகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த வாயலுார் - உய்யாலிகுப்பம் மீனவர் பகுதியில், 20 ஆண்டுகளுக்கு முன் கடலரிப்பில் மீனவர்கள் வீடுகள் இழந்தனர். இதையடுத்து, பிற்படுத்தப்பட்டோர் நல துறை, புதுப்பட்டினம் பகுதியில், தனியாரிடம் வாங்கிய நிலம், அரசு கிராமநத்தம் புறம்போக்கு நிலம் என, தலா 2.5 சென்ட் வீதம், 278 பேருக்கு இலவசமாக வழங்கியது.2

கடந்த 2004 சுனாமி பாதிப்பைத் தொடர்ந்து, அரசு அனுமதியுடன், தனியார் தன்னார்வ நிறுவனம் சார்பில், வீடுகளும் கட்டி ஒப்படைக்கப்பட்டன.பயனாளிகள், வீட்டு வரி செலுத்தி, மின் இணைப்பு பெற்று வசிக்கின்றனர். நிலம் வழங்கிய பிற்படுத்தப்பட்டோர் நல துறை, பயனாளிகளிடம், அனுபவ சான்று வழங்கிய நிலையில், வருவாய்த் துறை, தற்போது வரை, வீட்டுமனைப் பட்டா வழங்கவில்லை
இது குறித்து, மீனவர்கள் கூறியதாவது:
எங்கள் பகுதியில், கடல் அரித்து, வீடுகள் கடலில் மூழ்கின. எனவே, புதிய வீடுகள் கட்ட அன்றைய காஞ்சிபுரம் கலெக்டர் இறையன்பு, நேரடியாக இப்பகுதி வந்து, எங்களுக்கு இலவச நிலம் வழங்கினார். 23 ஆண்டுகள் கடந்தும், நிலத்திற்கு மனைப்பட்டா வழங்கவில்லை. அதிகாரிகளிடம் முறையிட்டும் பயனில்லை. நிலம் வழங்கிய இறையன்பு, தற்போது தலைமைச் செயலராக உள்ளார். பட்டா கேட்டு, அவரிடமே முறையிட உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X