அரசியல் செய்தி

தமிழ்நாடு

மக்கள் ஆசி யாத்திரை: 16ல் வருகிறார் முருகன்

Updated : ஆக 09, 2021 | Added : ஆக 09, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
பா.ஜ.,வின் பிரமாண்ட மூன்று நாள், 'மக்கள் ஆசி யாத்திரை' மேற்கொள்வதற்காக, மத்திய இணையமைச்சர் முருகன், 16ம் தேதி தமிழகம் வருகிறார்.நியமனம்தமிழக பா.ஜ., தலைவராக இருந்த முருகன், சமீபத்தில் நடந்த மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில், இணை அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார்.மீன்வளம், கால்நடை மற்றும் பால் பொருட்கள் துறையுடன், செய்தி - ஒலிபரப்பு துறையும், அவருக்கு

பா.ஜ.,வின் பிரமாண்ட மூன்று நாள், 'மக்கள் ஆசி யாத்திரை' மேற்கொள்வதற்காக, மத்திய இணையமைச்சர் முருகன், 16ம் தேதி தமிழகம் வருகிறார்.நியமனம்தமிழக பா.ஜ., தலைவராக இருந்த முருகன், சமீபத்தில் நடந்த மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில், இணை அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார்.



latest tamil news



மீன்வளம், கால்நடை மற்றும் பால் பொருட்கள் துறையுடன், செய்தி - ஒலிபரப்பு துறையும், அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரியான அண்ணாமலை, தமிழக பா.ஜ., தலைவராக நியமிக்கப்பட்டார். சமீபத்தில் பதவியேற்ற அவர், டில்லிக்கு நேற்று வந்தார்.மத்திய அமைச்சர்கள், பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோரை அவர் சந்தித்து பேசினார்.பின் நிருபர்களிடம், அவர் கூறியதாவது:கட்சியை மக்களிடையே மேலும் பிரபலப்படுத்தவும், மக்களின் தேவைகளை அறிந்து கொள்ளவும், மக்கள் ஆசி யாத்திரையை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு உள்ளது.

மூன்று நாட்கள்தமிழகம் உட்பட, 19 மாநிலங்களில் இந்த யாத்திரை நடத்தப்பட உள்ளது. அருணாசல பிரதேசம், அசாம், பீஹார், டில்லி, குஜராத், ஹிமாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட், கர்நாடகா, மத்திய பிரதேசம். மஹாராஷ்டிரா, மணிப்பூர், ஒடிசா, ராஜஸ்தான், தெலுங்கானா, திரிபுரா, உத்தர பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் மேற்கு வங்கத்தில் இந்த யாத்திரை நடக்க உள்ளது.தமிழகத்தில், 16ம் தேதி முதல் மூன்று நாட்கள் நடக்கும் யாத்திரையில், மத்திய இணை அமைச்சர் முருகன் பங்கேற்கிறார்.கோவை, நாமக்கல், ஊட்டியில் அவர் இந்த யாத்திரையில் ஈடுபட உள்ளார்.

இந்த யாத்திரையின் போது, பல துறைகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்களை சந்திக்க உள்ளார். மேலும், அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பார்.இந்த யாத்திரை பிரமாண்டமாகவும், மக்களை ஈர்க்கும் வகையிலும், சாதாரண மக்களை அடையும் வகையிலும் இருக்க வேண்டும் என, கட்சித் தலைமை கூறியுள்ளது. கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி யாத்திரை நடக்கும்.பலன் கிடைக்கும்தமிழகத்தில், 26 இடங்களில் விவசாய உற்பத்தி அமைப்புகளை உருவாக்குவது குறித்து, மத்திய அரசிடம் கூறியுள்ளேன்.


latest tamil news


இதன் வாயிலாக, தமிழகத்தில் உள்ள 10 லட்சம் மீனவர்களுக்கும் பலன் கிடைக்கும்.வாழ்நாள் முழுதும் ஒருவர், ஒரே கட்சியில் இருக்க வேண்டும் என்ற அவசியம் எதுவும் இல்லை. எங்கள் கொள்கைகளை ஏற்று, மாற்று கட்சியில் இருந்து யார் வந்தாலும் வரவேற்போம். தமிழக மக்களுக்கு சிறப்பாக பணியாற்ற, அரசியலில் மாற்றம் ஏற்படுத்தக் கூடியவர்களை வரவேற்போம்.இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
09-ஆக-202114:19:29 IST Report Abuse
vpurushothaman வாழ்நாள் முழுவதும் ஒரே கட்சியில் இருக்க வேண்டாமாம். நல்ல யோசனைதான். " ஆசிர்வாத யாத்திரை " - யாரை யார் ஆசிர்வதிக்கிறார்கள். வெற்றி வேல் - வீர வேல் என்றதற்கு நான்கு எம் எல் ஏ. க்கள். ஆசிர்வாதத்தால் அதிகரிக்கும் என எண்ணுகிறார்கள் போலும்.சும்மா சொல்லக் கூடாது. அண்ணாமலையார் " சுறு சுறு "தான்.
Rate this:
Cancel
Shaikh Miyakkhan - jeddah,சவுதி அரேபியா
09-ஆக-202112:01:21 IST Report Abuse
Shaikh Miyakkhan விலைவாசி உயர்வு ,பெட்ரோல் விலை உயர்வு , காஸ் சிலிண்டர் விலை உயர்வு மற்றும் பொதுத்துறையை அம்பானி அதானிக்கு விற்றது, வேலை இல்லமால் திண்டாடும் இளைஞ்சர்கள், மக்கள் இடம் பணப்புழக்கம் இல்லாமல் செய்தது மெஜாரிட்டி இருப்பதால் மக்களிடம் எதையும் கருத்து கேட்காமலும் எதிர்கட்சிகளை மதிக்காது தான்தோன்றி தனமாக நடப்பது .மக்கள் படுகின்ற அவஸ்தைக்கு மக்கள் ஆசி ஒன்று தான் குறை .மக்கள் உங்களையும் ஆசிர்வதிர்ப்பார்கள்
Rate this:
Cancel
Sandru - Chennai,இந்தியா
09-ஆக-202109:59:07 IST Report Abuse
Sandru அட முருகா . தமிழக மக்களுக்கு ஏன் இந்த சோதனை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X