பொது செய்தி

தமிழ்நாடு

வேளாண் துறைக்கு

Added : ஆக 09, 2021
Share
Advertisement
சென்னை-வேளாண் துறை தனி பட்ஜெட்டில், இயற்கை விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என, நேற்று நடந்த அரசின்இறுதி கட்ட கருத்து கேட்பு கூட்டத்தில், விவசாய சங்க பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.தமிழகத்தில், தி.மு.க., அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், தேர்தல் அறிக்கையில் கூறியபடி, வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என, முதல்வர்ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

சென்னை-வேளாண் துறை தனி பட்ஜெட்டில், இயற்கை விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என, நேற்று நடந்த அரசின்இறுதி கட்ட கருத்து கேட்பு கூட்டத்தில், விவசாய சங்க பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

தமிழகத்தில், தி.மு.க., அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், தேர்தல் அறிக்கையில் கூறியபடி, வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என, முதல்வர்ஸ்டாலின் அறிவித்து உள்ளார். வரும், 13ம் தேதி பொது பட்ஜெட்; 14ம் தேதி வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.வேளாண் பட்ஜெட்டில்இடம் பெற வேண்டிய திட்டங்கள் குறித்து, மாவட்ட வாரியாக விவசாயிகள், வேளாண் வல்லுனர்கள் உள்ளிட்டோரிடம் அரசு கருத்து கேட்டது.இதைத் தொடர்ந்து, விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் இறுதி கட்ட கருத்து கேட்பு கூட்டம், சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள வேளாண் துறை இயக்குனர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

இதில், வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், மாநில வளர்ச்சி கொள்கை குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன், வேளாண் வணிகப்பிரிவு இயக்குனர் வள்ளலார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பல்வேறு மாவட்ட விவசாய சங்க பிரதிநிதிகளும் பங்கேற்றனர். 'இயற்கை விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்; சந்தை ஒப்பந்த சாகுபடி திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; வேளாண் உற்பத்தி பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பதற்கான உதவிகளை வழங்க வேண்டும்' என, கூட்டத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர்.

அரசால், புதிதாக வகுக்கப்பட்ட திட்டங்கள் குறித்தும், விவசாயிகளிடம் எடுத்துரைக்கப்பட்டது. காலை, 10:00 மணிக்கு துவங்கிய கருத்து கேட்பு கூட்டம் மாலை, 5:00 மணி வரை நடந்தது.இதில் விவாதிக்கப்பட்ட கருத்துகள் அடிப்படையில், ஓரிரு நாட்களில் பட்ஜெட் திட்டங்கள் இறுதி செய்யப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X