பொது செய்தி

தமிழ்நாடு

நிறைவடையாத மேம்பாலத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

Added : ஆக 09, 2021
Share
Advertisement
கடம்பத்துார்: கடம்பத்துார் ரயில்வே பகுதியில், மேம்பாலம் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டு ஆறு ஆண்டுகளாகியும் நிறைவடையாதது, வாகன ஒட்டிகள் மற்றும் பொதுமக்களை கடும் அவதிக்கு உள்ளாக்கி உள்ளது.திருவள்ளூர் -- பேரம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ளது கடம்பத்துார் ரயில் நிலையம். இந்த ரயில் நிலைய கடவுப்பாதை வழியே, தினமும் 3,000க்கும் மேற்பட்ட வாகனங்கள், பேரம்பாக்கம், மப்பேடு வழியாக,

கடம்பத்துார்: கடம்பத்துார் ரயில்வே பகுதியில், மேம்பாலம் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டு ஆறு ஆண்டுகளாகியும் நிறைவடையாதது, வாகன ஒட்டிகள் மற்றும் பொதுமக்களை கடும் அவதிக்கு உள்ளாக்கி உள்ளது.
திருவள்ளூர் -- பேரம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ளது கடம்பத்துார் ரயில் நிலையம். இந்த ரயில் நிலைய கடவுப்பாதை வழியே, தினமும் 3,000க்கும் மேற்பட்ட வாகனங்கள், பேரம்பாக்கம், மப்பேடு வழியாக, காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதுாருக்கு சென்று வருகின்றன.
இதையடுத்து பொதுமக்கள் வேண்டுகோள்படி, கடம்பத்துார் ரயில் நிலையத்தில் 14.5 கோடி ரூபாய் மதிப்பில், 29 துாண்களுடன் 700 மீட்டர் நீளம், 8.5 மீட்டர் அலத்தில் மேம்பாலம் கட்டும் பணி 2015ல் துவங்கியது. இரு ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டு துவங்கிய பணிகள், ஆறு ஆண்டுகளாகியும், மேம்பால பணிகள் நிறைவடையாததால், வாகன ஓட்டிகள் தினமும் நெரிசலில் சிக்கி, அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, மேம்பால பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை திட்டங்கள் கோட்டப் பொறியாளர் அருணா கூறியதாவது:
நெடுஞ்சாலைத் துறை பணிகள் நிறைவடைந்துள்ளன. ரயில்வே பகுதியில் மேம்பால பணிகள் தற்போது நடந்து வருகின்றன. பணிகள் நிறைவடைந்ததும், ஆகஸ்டு மாதம் 15ம் தேதிக்குள் அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்புவோம். அரசிடமிருந்து உத்தரவு வந்தவுடன் மேம்பாலம் திறப்பு விழா நடத்தி, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X