பொது செய்தி

இந்தியா

பள்ளிகளை விரைவில் திறக்க பார்லி., குழு வலியுறுத்தல்

Updated : ஆக 09, 2021 | Added : ஆக 09, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி- கொரோனா தொற்றால் ஓராண்டுக்கு மேல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் பல குடும்பங்களின் நிலைமை மாறியுள்ளது; அதனால் குழந்தைகள் நலன் கருதி பள்ளிகளை விரைவில் திறக்க வேண்டும் என, கல்வித்துறைக்கான பார்லி., நிலைக்குழு தெரிவித்துள்ளது.கல்வித்துறைக்கான பார்லிமென்ட் நிலைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கொரோனா தொற்று காரணமாக கடந்தாண்டு மார்ச்

புதுடில்லி- கொரோனா தொற்றால் ஓராண்டுக்கு மேல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் பல குடும்பங்களின் நிலைமை மாறியுள்ளது; அதனால் குழந்தைகள் நலன் கருதி பள்ளிகளை விரைவில் திறக்க வேண்டும் என, கல்வித்துறைக்கான பார்லி., நிலைக்குழு தெரிவித்துள்ளது.



latest tamil news



கல்வித்துறைக்கான பார்லிமென்ட் நிலைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கொரோனா தொற்று காரணமாக கடந்தாண்டு மார்ச் முதல் நாடு முழுதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இது பல குடும்பங்களில் மோசமான நிலையை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மாணவியரின் கல்விக்கு பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.ஏழை மாணவியர் பலர், வீட்டு வேலைகள் செய்யும் குழந்தை தொழிலாளர்களாக மாறியுள்ளனர். குழந்தை திருமணங்கள் அதிகரித்துள்ளன. பள்ளிகள் மூடப்பட்டுள்ளது மாணவ - மாணவியருக்கு மனதளவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.


latest tamil news


பள்ளிகளுக்குச் செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளே குழந்தைகள் முடங்கிக் கிடக்கின்றனர்; இது, பெற்றோர் - குழந்தைகள் உறவையும் பாதித்துள்ளது. அதனால் குழந்தைகள் நலன் கருதி பள்ளிகளை விரைவில் திறக்க வேண்டியது கட்டாயமாகியுள்ளது. ஒரு நாள் விட்டு ஒருநாள், வாரத்தில் மூன்று நாட்கள் என பள்ளிகளை நடத்தலாம்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் பள்ளிகளுக்கு மாணவ - மாணவியரை வரச் சொல்லலாம். ஏதாதவது ஒரு வகையில் பள்ளிகளை திறப்பது பற்றி ஆய்வு செய்ய வேண்டும். அதை விரைவில் செயல்படுத்துவதும் முக்கியம். இவ்வாறு அறிக்கையில் கூறப்படடுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
09-ஆக-202110:45:55 IST Report Abuse
S. Narayanan இந்திய மக்கள் அனைவரும் திரு. மோடிஜி அவர்களுக்கும் மத்திய அரசுக்கும் நன்றி சொல்ல கடமை பட்டவர்கள் ஆவார். குறுகிய காலத்தில் சரியான முடிவு எடுக்கும் வகையில் அரசை வழி நடத்தி கோரோனா தொற்றை கட்டுப்படுத்தி மக்களின் துயர் துடைக்க முயற்சி மேற்கொண்டார்.
Rate this:
Cancel
mahendran - trichy,இந்தியா
09-ஆக-202109:26:20 IST Report Abuse
mahendran The experts will advice the govt to schools and colleges.The media will put pressure to it. The reason they will say is that the young students will be less affected.The second wave in TN started only from educational institutions in March. In second wave many youngsters got affected and it became fatal for many. The cost of hospitalization is min.1 lac Can poor students afford this if they get affected. Knowing all this media is putting pressure on govt.to .Is it possible to sit in a class for 8 hours with mask. All of us are anticipating third wave, after this and getting maximum people vaccinated from 2022 jan. At present life is more important than education.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X