விவசாய நிதி உதவி: 9வது தவணை இன்று விடுவிப்பு

Updated : ஆக 09, 2021 | Added : ஆக 09, 2021 | கருத்துகள் (8)
Advertisement
புதுடில்லி: 'பிரதம மந்திரி கிசான்' திட்டத்தின் கீழ் ஒன்பதாவது தவணையாக 19 ஆயிரத்து 500 கோடி ரூபாயை பயனாளிகளுக்கு பிரதமர் இன்று விடுவிக்கிறார்.பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2019ம் ஆண்டில், 'பிரதம மந்திரி கிசான்' திட்டத்தை அமல்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் ஏழை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 2,000

புதுடில்லி: 'பிரதம மந்திரி கிசான்' திட்டத்தின் கீழ் ஒன்பதாவது தவணையாக 19 ஆயிரத்து 500 கோடி ரூபாயை பயனாளிகளுக்கு பிரதமர் இன்று விடுவிக்கிறார்.latest tamil newsபிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2019ம் ஆண்டில், 'பிரதம மந்திரி கிசான்' திட்டத்தை அமல்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் ஏழை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 2,000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக நிதி வழங்கப்படுகிறது.இந்த திட்டத்தின் கீழ் இதுவரை எட்டு தவணைகளில், 1.38 லட்சம் கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.


latest tamil newsஇந்நிலையில், பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் அடுத்த தவணை நிதியை பிரதமர் நரேந்திர மோடி இன்று 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக விடுவிக்கிறார். 9.75 கோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களுக்கு 19 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக பரிமாற்றம் செய்யப்பட உள்ளது. நிகழ்ச்சியில் விவசாய பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடுவதுடன், நாட்டு மக்களிடமும் உரையாற்றுகிறார்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RK -  ( Posted via: Dinamalar Android App )
09-ஆக-202118:23:15 IST Report Abuse
RK விவசாய நிதி உதவி நிறையபேர் உண்மையாக விவசாய நிலம் இல்லாமல் வீட்டில் இருக்கும் உறுப்பினர்கள் அனைவரும் அரசை ஏமாற்றி இன்னமும் அவர்கள் பேங்க் அக்கவுண்டில் பணம் வருகிறது. மத்திய அரசு... ஏமாற்றுபவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். ஏன் என்றால் என்னுடைய வரி பணமும் அதில் அடக்கம்.
Rate this:
Cancel
09-ஆக-202115:58:03 IST Report Abuse
Kumar Singapore ஏற்கெனவே கொடுத்த 8 தவணையை எப்படி செலவு பண்ணுறதுண்ணு தெரியாம விவசாயிங்க முளிச்சுட்டு இருக்காங்க. இதுல 9வது தவணை வேறயா?
Rate this:
Cancel
Jai -  ( Posted via: Dinamalar Android App )
09-ஆக-202112:22:12 IST Report Abuse
Jai விவசாயிகளுக்கு காசு கொடுப்பது நல்லதா கெட்டதா என்ற விவாதம் தொடர்ந்து கொண்டே இருக்கும். ஆனால் இதன் பின்னாலுள்ள உழைப்பு குறிப்பிடத்தக்கது. அனைத்து விவசாயிகளும் ஆதார் கார்டு மூலம் கண்டறியப்பட்டு அவர்களுடைய வங்கி கணக்கிற்கு நேரடியாக கொடுப்ப கொடுக்கப்படுகிறது. இதுபோன்ற சிஸ்டம் இதற்கு முன்னால் இருந்தது இல்லை இதற்கு முன் இவ்வாறு மானியம் கொடுக்க வேண்டுமென்றால் மத்திய அரசு மாநில அரசுக்கு கொடுக்கும் மாநில அரசு அதை அவர்களுடைய பெயரில் வேறு விதமாக கொடுக்க முயற்சிப்பார்கள். ஆனால் இந்த பணம் முழுவதுமாக விவசாயியை சென்று அடையாது. இப்பொழுது உள்ள சிஸ்டம் மூலமாக இது சாத்தியமாகியுள்ளது. இதேபோன்று மாநில அரசுகளும் ஆதார் கார்டு மூலம் பயன்களை கொடுத்தால் மக்கள் ரேஷன் கடை க்யூவில் நிற்க வேண்டியது இல்லை. ஆனால் அரசியல் நோக்கத்திற்காக மாநில அரசு இவ்வாறு நேரடியாக பணம் அனுப்பாமல் அவர்களை ரேஷன் கடைக்கு வரச்சொல்லி கூட்டம் கூட்டி பணத்தை கொடுத்து அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள்
Rate this:
09-ஆக-202114:39:07 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம்ரிலையன்ஸ் JIO வளர BSNK முடக்கம் / ரிலையன்ஸ் PETROLEUM வளர BPCL முடக்கம் / ரிலையன்ஸ் insurance வளர LIC முடக்கம் / ரிலையன்ஸ் GAS வளர ONGC முடக்கம் / ரிலையன்ஸ் defence வளர HAL முடக்கம் , இப்போ சொல்லுங்கள் யார் இந்தியாவின் உண்மையான பிரதமர் மோடியா இல்லை அம்பானியா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X