ரயில்வே மேம்பாலத்தில் பைக்குகள் மீது கார் மோதல் | Dinamalar

இந்தியா

ரயில்வே மேம்பாலத்தில் பைக்குகள் மீது கார் மோதல்

Added : ஆக 09, 2021
Share
வில்லியனுார் : அரும்பார்த்தபுரம் ரயில்வே மேம்பாலத்தில், பைக்குகள் மீது கார் அடுத்தடுத்து மோதியதில் இருவர் படுகாயம் அடைந்தனர்.வில்லியனுார் அடுத்த உறுவையாறு கிராமத்தை சேர்ந்தவர் செல்வம்,35; சிக்கன் சென்டர் கேஷியர். நாவற்குளம் குருசித்தானந்த நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன்,55.இருவரும் திருக்காஞ்சியில் தர்ப்பணம் கொடுத்து விட்டு, நேற்று காலை 7:10 மணியளவில், புதுச்சேரி நோக்கி

வில்லியனுார் : அரும்பார்த்தபுரம் ரயில்வே மேம்பாலத்தில், பைக்குகள் மீது கார் அடுத்தடுத்து மோதியதில் இருவர் படுகாயம் அடைந்தனர்.

வில்லியனுார் அடுத்த உறுவையாறு கிராமத்தை சேர்ந்தவர் செல்வம்,35; சிக்கன் சென்டர் கேஷியர். நாவற்குளம் குருசித்தானந்த நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன்,55.இருவரும் திருக்காஞ்சியில் தர்ப்பணம் கொடுத்து விட்டு, நேற்று காலை 7:10 மணியளவில், புதுச்சேரி நோக்கி சென்றுகொண்டிருந்தனர். அரும்பார்த்தபுரம் ரயில்வே மேம்பாலத்தில் சென்ற போது, பின்னால் அதிவேகமாக வந்த ஹோண்டா சிட்டி கார், செல்வம் பைக் மீது மோதியது.

இதில் துாக்கி வீசப்பட்டு, மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்த செல்வத்திற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.அவரை தொடர்ந்து, முன்னால் சென்ற கிருஷ்ணன் பைக் மீதும் கார் மோதியதில், அவருக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து வில்லிய னுார் போக்குவரத்து போலீஸ் உதவி சப் இன்ஸ் பெக்டர் கொண்டா பாலாஜி வழக்கு பதிவு செய்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X