பொது செய்தி

இந்தியா

இனி வாட்ஸ்அப்பிலும் கோவிட் தடுப்பூசி சான்றிதழ்: சுகாதார அமைச்சகம் ஏற்பாடு!

Updated : ஆக 09, 2021 | Added : ஆக 09, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
புது டில்லி: மூன்றாம் அலை கோவிட் அச்சுறுத்தல் காரணமாக வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு பயணிக்க கோவிட் தடுப்பூசி சான்று அவசியமாகிறது. இந்நிலையில் எளிமையாக வாட்ஸ்அப்பிலேயே தடுப்பூசி சான்று பெறும் வசதியை மத்திய சுகாதார அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் முன்னர் அதற்கான சான்றிதழை பெற வேண்டுமானால் கோவின் தளத்திற்கு சென்று

புது டில்லி: மூன்றாம் அலை கோவிட் அச்சுறுத்தல் காரணமாக வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு பயணிக்க கோவிட் தடுப்பூசி சான்று அவசியமாகிறது. இந்நிலையில் எளிமையாக வாட்ஸ்அப்பிலேயே தடுப்பூசி சான்று பெறும் வசதியை மத்திய சுகாதார அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.



latest tamil news


கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் முன்னர் அதற்கான சான்றிதழை பெற வேண்டுமானால் கோவின் தளத்திற்கு சென்று லாகின் செய்ய வேண்டும். இது அனைவரும் உடனே பயன்படுத்த சிரமமானதாக இருந்தது. தற்போது அதனை எளிமைப்படுத்தியுள்ளார் புதிய மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மான்டவியா. இதற்காக +91 9013151515 என்ற பிரத்யேக வாட்ஸ்அப் எண் அறிவித்துள்ளார்.


வாட்ஸ் ஆப்பில் கோவிட் தடுப்பூசி சான்றிதழ் பெறலாம்

latest tamil news



இது பற்றி சுகாதார அமைச்சகம் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாமான்ய மக்களின் வாழ்வில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளோம். MyGov கொரோனா உதவி மையம் மூலம் 3 எளிதான படிகளில் கோவிட் சான்றை பெறலாம். +919013151515 என்ற எண்ணை சேமிக்கவும். பிறகு அந்த எண்ணிற்கு வாட்ஸ்அப்பில், 'covid certificate' என டைப் செய்து அனுப்புங்கள். ஓ.டி.பி., தந்து நொடிகளில் உங்கள் சான்றிதழைப் பெறுங்கள். என குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-ஆக-202117:27:18 IST Report Abuse
theruvasagan ரொம்ப சுலபமா தடுப்பூசி சான்றை டவுன்லோடு செய்யலாம். பைசா செலவில்லாமல். அருமையான ஆன்லைன் வசதி. இங்க மக்கள் நல அரசின் சங்கதி என்னன்னு பார்த்தா சொத்து வில்லங்க சான்றுக்கான முடங்கிப்போனஆன்லைன் சேவையை தலைமுழுகிவிட்டு ரிஜிஸ்ட்ரார் ஆபிசுக்கு நேரா போய் கட்டணத்தையும் கப்பத்தையும் செலுத்திட்டு கால் தேய நடையோ நடையா நடந்து சந்தோஷமா வாங்கிட்டு வரலாம். விடியல் வந்தாச்சுல்லே.
Rate this:
Cancel
S.Ganesan - Hosur,இந்தியா
09-ஆக-202116:23:55 IST Report Abuse
S.Ganesan சிறந்த ஏற்பாடு. sirappaka வேலை செய்கிறது. ஒரே செர்டிபிகேட்டில் இரண்டு டோஸ் போட்டுக்கொண்ட தகவல் கிடைக்கிறது.
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
09-ஆக-202113:33:35 IST Report Abuse
Dhurvesh முதலில் கோவிட் தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு செயுங்கள் , அதுவும் தடை இன்றி கிடைக்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X