புது டில்லி: மூன்றாம் அலை கோவிட் அச்சுறுத்தல் காரணமாக வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு பயணிக்க கோவிட் தடுப்பூசி சான்று அவசியமாகிறது. இந்நிலையில் எளிமையாக வாட்ஸ்அப்பிலேயே தடுப்பூசி சான்று பெறும் வசதியை மத்திய சுகாதார அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் முன்னர் அதற்கான சான்றிதழை பெற வேண்டுமானால் கோவின் தளத்திற்கு சென்று லாகின் செய்ய வேண்டும். இது அனைவரும் உடனே பயன்படுத்த சிரமமானதாக இருந்தது. தற்போது அதனை எளிமைப்படுத்தியுள்ளார் புதிய மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மான்டவியா. இதற்காக +91 9013151515 என்ற பிரத்யேக வாட்ஸ்அப் எண் அறிவித்துள்ளார்.

இது பற்றி சுகாதார அமைச்சகம் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாமான்ய மக்களின் வாழ்வில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளோம். MyGov கொரோனா உதவி மையம் மூலம் 3 எளிதான படிகளில் கோவிட் சான்றை பெறலாம். +919013151515 என்ற எண்ணை சேமிக்கவும். பிறகு அந்த எண்ணிற்கு வாட்ஸ்அப்பில், 'covid certificate' என டைப் செய்து அனுப்புங்கள். ஓ.டி.பி., தந்து நொடிகளில் உங்கள் சான்றிதழைப் பெறுங்கள். என குறிப்பிட்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE