அ.தி.மு.க., அலுவலகத்தில் கண் பரிசோதனை முகாம் | Dinamalar

இந்தியா

அ.தி.மு.க., அலுவலகத்தில் கண் பரிசோதனை முகாம்

Added : ஆக 09, 2021
Share
புதுச்சேரி : புதுச்சேரி தேசிய நல அறக்கட்டளை, ஐசன் ஐ கிளினிக் மற்றும் ஆப்டிஸ் சார்பில், இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.உப்பளம் அ.தி.மு.க., அலுவலகத்தில் நடந்த முகாமை, புதுச்சேரி அ.தி.மு.க., கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தொடங்கி வைத்தார்.காலை 10.00 முதல் மாலை 4.00 வரை நடந்த முகாமில், கண் பரிசோதனை செய்யப்பட்டது. பரிந்துரைக்கப்பட்ட நபர்களுக்கு இலவச கண் கண்ணாடி

புதுச்சேரி : புதுச்சேரி தேசிய நல அறக்கட்டளை, ஐசன் ஐ கிளினிக் மற்றும் ஆப்டிஸ் சார்பில், இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.

உப்பளம் அ.தி.மு.க., அலுவலகத்தில் நடந்த முகாமை, புதுச்சேரி அ.தி.மு.க., கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தொடங்கி வைத்தார்.காலை 10.00 முதல் மாலை 4.00 வரை நடந்த முகாமில், கண் பரிசோதனை செய்யப்பட்டது. பரிந்துரைக்கப்பட்ட நபர்களுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கப்பட்டது.முகாமில் மாநில இணை செயலாளர் கணேசன், துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ரவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X